சசிகலாவுக்கு அளிக்கப்படும் சலுகைகள் குறித்த அறிக்கையில் உறுதியாக இருக்கிறேன்.. டிஐஜி ரூபா அதிரடி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: சசிகலாவுக்கு சிறையில் அளிக்கப்படும் சலுகைகள் குறித்த அறிக்கையில் தான் உறுதியாக இருப்பதாக டிஐஜி ரூபா திட்டவட்டமாக தெரிவிதுள்ளார். தன்மீது தவறு இருந்தால் எந்த விசாரணைக்கும் தயார் என்றும் கர்நாடக சிறைத்துறை டிஐஜி ரூபா தெரிவித்துள்ளார்.

பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு பல்வேறு வசதிகளை செய்து தர கர்நாடக சிறைத்துறை டிஜிபி சத்தியநாராயண ராவ் 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றுள்ளார் என டிஐஜி ரூபா குற்றம்சாட்டினார்.

மேலும் பல குற்றவாளிகளுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படுவதாகவும் அவர் கூறியிருந்தார். ரூபாவின் இந்தக் குற்றச்சாட்டுகள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.

விசாரணை அதிகாரி நியமனம்

விசாரணை அதிகாரி நியமனம்

இதுகுறித்து விசாரிக்க குழு அமைக்கப்படும் என கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். சிறையில் சசிகலாவுக்கு அளிக்கப்படும் சலுகைகள் குறித்து விசாரிக்க விசாரணை அதிகாரியும் நியமிக்கப்பட்டுள்ளார்.

படக்காட்சிகள் வெளியானது..

படக்காட்சிகள் வெளியானது..

இந்நிலையில் சத்திய நாராயணராவ் கூறிய புகார்களுக்கு டிஐஜி ரூபா விளக்கம் அளித்துள்ளார். சசிகலா அறையில் டிவி, மின்விசிறி இருந்த படக்காட்சிகள் வெளியானது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என டிஐஜி ரூபா தெரிவித்துள்ளார்.

தன்னை குறிவைப்பது நியாயமற்றது

தன்னை குறிவைப்பது நியாயமற்றது

மேலும் தன்மீது தவறு இருந்தால் எந்த விசாரணைக்கும் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். சசிகலா விவகாரத்தில் தன்னை குறிவைப்பது நியாயமற்றது என்றும் டிஐஜி ரூபா தெரிவித்துள்ளார்.

சசிகலாவுக்கு சலுகைகள்

சசிகலாவுக்கு சலுகைகள்

சசிகலா விவகாரத்தில் டிஜிபிக்கு அளித்த அறிக்கை பற்றி தான் ஊடகங்களிடம் பேசவில்லை என்றும் அவர் கூறினார். சசிகலாவுக்கு சிறையில் அளிக்கப்படும் சலுகைகள் குறித்த அறிக்கையில் தான் உறுதியாக இருப்பதாகவும் டிஐஜி ரூபா திட்டவட்டமாக தெரிவிதுள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
DIG Roopa says that sasikala is getting concessions in the jail. The Karnataka prisons DIG Rupa said that She is ready for any inquiry if she is wrong.
Please Wait while comments are loading...