For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மனவளர்ச்சி பாதித்த, ஆட்டிசம் குழந்தைகளுக்கான புதிய சிகிச்சை முறை... ‘டால்பின் தெரபி’!

Google Oneindia Tamil News

ஹவானா: கியூபாவில் டால்பின்கள் மூலம் மனவளர்ச்சிக் குறைவான மற்றும் ஆட்டிசம் பாதிப்புடைய குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது.

மருத்துவத்துறையில் நோயைத் தீர்க்க பிசியோதெரபி, ஸ்பீச் தெரபி உள்ளிட்ட பல்வேறு முறையில் சிகிச்சைகள் வழங்கப் படுகின்றன. அந்தவகையில், கியூபாவில் புதுவகையாக டால்பின் சிகிச்சை என்ற ஒன்று புழக்கத்தில் உள்ளது.

இந்தச் சிகிச்சை முறை மனவளர்ச்சி குறைவான மற்றும் ஆட்டிசம் பாதிப்புடைய குழந்தைகளின் புலநலன்கள் ஒருங்கிணைப்பிற்காக தரப்படுகிறது.

தேசிய மீன்கள் அருங்காட்சியம்...

தேசிய மீன்கள் அருங்காட்சியம்...

கியூபாவின் தலைநகரான ஹவானா நகரில் உள்ள தேசிய மீன்கள் அருங்காட்சியகத்தில் தான் இந்த டால்பின் தெரபி மன வளக் குறைவான, ஆட்டிசம் பாதிப்புடைய குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறாது.

கவனிப்புத் திறன் மேம்பாடு...

கவனிப்புத் திறன் மேம்பாடு...

இந்த சிகிச்சையில் சம்பந்தப்பட்ட குழந்தைகளுக்கு கவனிப்புத் திறன், கூர்ந்து பார்க்கும் திறன், செயல்களை ஒருங்கிணைத்துச் செய்வது குறித்து பயிற்சி தரப்படுகிறது.

பலநலன்கள் ஒருங்கிணைப்பு...

பலநலன்கள் ஒருங்கிணைப்பு...

பொதுவாக மன வளக் குறைவு மற்றும் ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்குஒருங்கிணைப்புத் திறன் குறைவாக இருக்கும். எனவே இந்தப் பயிற்சியின் மூலம் அவர்களது புலநன்களை ஒருங்கிணைக்க முடியும் என்பது இங்குள்ள பயிற்சியாளர்களின் கருத்தாகும்.

ஸ்பரிசம்...

ஸ்பரிசம்...

இந்தத் தெரப்பிக்கு வரும் குழந்தைகள் டால்பினுக்கு உணவு போட்டு மகிழ்கிறார்கள், அதைத் தொட்டு ஸ்பரிசத்தை உணர்கிறார்கள். கூர்ந்து கவனிக்கிறார்கள்.

வரவேற்பு...

வரவேற்பு...

இந்த டால்பின் தெரப்பிக்கு நல்ல வரவேற்பு உள்ளதால் இதனை மற்ற நாடுகளுக்கும் விரிவு படுத்த முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறதாம்.

English summary
As part of a rehabilitation project, dozens of Cuban children with special needs attend dolphin-assisted therapy at the National Aquarium in Havana.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X