For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தண்ணியடிச்சுட்டு வண்டி ஓட்டினா... ஹைதராபாத் போலீஸார் தரும் நூதன தண்டனை

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: ஹைதராபாத்தி்ல் குடித்து விட்டு வாகனம் ஓட்டுவோர் போலீஸாரிடம் சிக்கினால் கடும் வெயில் 3 நாட்களுக்கு குடிபோதையில் வாகனம் ஓட்டாதீர் என்ற வாசகத்துடன் கூடிய தட்டியை ஏந்தியபடி நிற்க வேண்டும் என்ற நூதன தண்டனையை ஹைதராபாத் போலீஸார் கொண்டு வந்துள்ளனர்.

குடித்து விட்டு வாகனம் ஓட்டுவோரால் ஏற்படும் விபத்துகளை சொல்லி மாள முடியாது. இந்தியாவில் நடைபெறும் சாலை விபத்துக்களில் குடிபோதையால் ஏர்படும் விபத்துக்களே அதிகம்.

இந்த நிலையில் ஹைதராபாத்தில் குடிபோதையில் வாகனம் ஓட்டுவோரை திருத்த நூதனத் திட்டத்தை அந்த ஊர் போலீஸார் கையில் எடுத்துள்ளனர்.

3 மணி நேரம்...

3 மணி நேரம்...

குடித்து விட்டு வாகனம் ஓட்டி பிடிபடுவோரை போலீஸார், ஒரு முக்கிய போக்குவரத்து சிக்னலில் தினசரி 3 மணி நேரம் நிற்க வைக்கிறார்கள்.

கையில் ஒரு தட்டியுடன்...

கையில் ஒரு தட்டியுடன்...

வெறும் கையுடன் கிடையாது. மாறாக அவர்களது கையில் ஒரு தட்டி கொடுக்க்படும். அதில் குடிபோதையில் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் அபாயங்கள் குறித்தவ வாசகங்கள் இடம் பெற்றிருக்கும்.

3 நாட்கள்...

3 நாட்கள்...

இந்த தட்டியுடன் 3 நாட்களுக்கு தினசரி 3 மணி நேரம அவர்கள் முக்கிய போக்குவரத்து சிக்னலில் நிற்க வேண்டும். இதுதான் தண்டனையாகும்.

சமூகசேவை...

சமூகசேவை...

இதுவரை இதுபோல 36 பேர் பிடிபட்டு இதுபோல நிற்க வைக்கப்பட்டுள்ளனராம். இதுதவிர வேறு சில சமூக சேவைகளையும் இவர்களுக்குத் தருகிறார்கள் போலீஸார்.

சிறை தண்டனை...

சிறை தண்டனை...

மருத்துவமனைக்கும் சென்று அங்கும் அவர்கள் சேவை செய்ய வேண்டும். தொடர்ந்து எல்லாவற்றுக்கு பிறகும் பிடிபட்டால் அவர்களுக்கு ஒரு மாத சிறைத் தண்டனை தரப்படும் வகையில் கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கிறாரக்ளாம்.

English summary
Hyderabad has come up with a new traffic rule: If anyone is found to be driving after getting drunk, he/she would have to hold up a placard at the traffic signal for 3 hours a day and that too for 3 days.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X