"எப்ப தான் வீட்டுக்கு போவோமோ....." - குமுளியில் சிக்கித் தவிக்கும் ஐயப்ப பக்தர்கள்
போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சபரிமலையிலிருந்து தமிழகம் திரும்ப முடியாத நிலையில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் நடுவழியில் தவித்து வருகின்றனர்.
Recommended Video

கேரளா: போக்குவரத்து சங்க ஊழியர்களின் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், தமிழகம் திரும்ப முடியாமல் ஐயப்ப பக்தர்கள் நடுவழியில் தவித்து வருகின்றனர்.
போக்குவரத்து தொழிலாளர்களுக்கு சிறப்பான ஊதிய உயர்வை அரசு வழங்கியுள்ளதாகவும், இந்த ஊதிய ஒப்பந்தத்தை ஏற்று போக்குவரத்து தொழிலாளர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மேலும் அரசு மற்றும் பொதுமக்களுக்கு அவப்பெயர் ஏற்படாத வகையில் போக்குவரத்து தொழிலாளர்கள் பணி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஆனாலும் அரசின் வார்த்தைகளை நம்ப தயாராக இல்லாத போக்குவரத்து ஊழியர்கள் தங்களின் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். இந்த போராட்டத்தால் சிறுவியாபாரிகள், தொழில்முனைவோர் உள்ளிட்டோர் தொழில் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் சபரிமலைக்கு தரிசனம் செய்ய சென்ற ஆயிரக்கணக்கான தமிழக பக்தர்கள் வீடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.
குமுளியில் தற்போது சிக்கியுள்ள பக்தர்கள் முறையான போக்குவரத்து வசதியில்லாததால் பேருந்து நிலையத்திலேயே தங்கி வருகின்றனர். கூட்ட நெரிசல் காரணமாக பேருந்து நிலையங்களில் சுகாதாரமற்ற சூழ்நிலை நிலவுவதால் செய்வதறியாமல் தவித்து வருவதாகவும் ஐயப்ப பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சூழ்நிலைகளை பயன்படுத்தி தனியார் பேருந்து நிறுவனங்கள் டிக்கெட்டுகளை பல நூறு ரூபாய்களை ஏற்றி விற்பதாகவும் கூறப்படுகிறது. பொங்கல் நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையில் போக்குவரத்து ஊழியர்களின் இந்த போராட்டம் தொடர்ந்தால் பெரும் நெருக்கடி உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி












Click it and Unblock the Notifications