இரட்டை இலை விவகாரம்- விசாரணை நிறைவு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது தேர்தல் ஆணையம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பான தேர்தல் ஆணையத்தின் விசாரணை முடிவடைந்து தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

அதிமுகவின் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணியினர் தங்களுக்குத்தான் அதிமுக, இரட்டை இலை சின்னம் உரிமை கோருகின்றனர். இது தொடர்பாக பல லட்சம் பக்கங்கள் அடங்கிய பிரமாணப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

EC reserves order on AIADMK Two leaves symbol case

ஆனால் சசிகலா தரப்பிலும் அதிமுக கட்சி பெயர், இரட்டை இலை சின்னத்துக்கும் உரிமை கோரி பிரமாணப் பத்திரங்களைத் தாக்கல் செய்தது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தது.

இன்று இறுதி கட்ட விசாரணை நடைபெற்றது. ஓபிஎஸ் தரப்பும் தினகரன் தரப்பும் தங்களது வாதங்களை முன்வைத்தனர். திடீரென தினகரன் தரப்பு கூடுதல் கால அவகாசம் கேட்டது.

ஆனால் தேர்தல் ஆணையம் தினகரன் தரப்பின் கோரிக்கையை நிராகரித்துவிட்டது. வரும் திங்கள்கிழமைக்குள் அனைத்து தரப்பும் வாதங்களை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது தேர்தல் ஆணையம். அனேகமாக இன்னும் ஒருவாரத்தில் தீர்ப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Election Commission has reserved the order in AIADMK two leaves symbol case, all parties have to file written submissions by November 13.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

X