ஆர்.கே. நகர் இடைத்தேர்தலை ராசியான தேதியில் நடத்த லஞ்சம் - டிடிவி தினகரன் மீது புது புகார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்ட பிறகு மறுதேர்தல் குறித்து தினகரனும், சுகேஷ் சந்திரசேகரும் பேசிய ஆடியோ பதிவு தங்களிடம் உள்ளதாக நீதிமன்றத்தில் டெல்லி காவல்துறை தகவல் தெரிவித்து உள்ளது. தனக்கு ராசியான எண் 5 என ஜோதிடர் கூறியுள்ளதாக சுகேஷிடம் தினகரன் தெரிவித்துள்ளார். இந்த தேதியில் தேர்தல் தேதியை குறிக்க டிடிவி தினகரன் லஞ்சம் தர முயன்றதாக டெல்லி போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர்.

அதிமுக அம்மா அணியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாகவும், இதற்காக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவருடன் ரூ.50 கோடி பேரம் பேசியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது தொடர்பாக டெல்லி போலீசார் விசாரணை நடத்தி, டெல்லியில் ஓட்டலில் தங்கியிருந்த சுகேஷ் சந்திரசேகரை கடந்த மாதம் 17ஆம் தேதி கைது செய்தனர். சுகேஷ் வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து டிடிவி தினகரனையும், அவரது நண்பர் மல்லிகார்ஜுனாவையும் கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி நள்ளிரவு டெல்லி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

திகார் சிறையில் டிடிவி தினகரன்

திகார் சிறையில் டிடிவி தினகரன்

நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் டிடிவி தினகரன், ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். ஜாமீன் மனு மீதான விசாரணை விரைவில் நடைபெற உள்ளது.

சுகேஷ் ஜாமீன் மனு

சுகேஷ் ஜாமீன் மனு

சுகேஷ் சந்திரசேகரின் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று டெல்லி டெல்லி கீழமை நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது தீர்ப்பை நீதிபதிகள் திங்கள் கிழமைக்கு ஒத்திவைத்தனர்.

தினகரன் பேச்சு

தினகரன் பேச்சு

நீதிமன்றத்தில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்ட பிறகு மறுதேர்தல் குறித்து தினகரனும், சுகேஷ் சந்திரசேகரும் பேசிய ஆடியோ பதிவு தங்களிடம் உள்ளதாக நீதிமன்றத்தில் டெல்லி போலீசார் தகவல் தெரிவித்து உள்ளனர்.

ராசி எண் 5

ராசி எண் 5

ஆர்.கே.நகர் மறுதேர்தல் தேதி 5 என்ற எண்ணில் வருமாறு ஏற்பாடு செய்யும் படி பேசிய ஆடியோ பதிவு உள்ளதாக காவல்துறை தகவல் கூறின் உள்ளது. தனக்கு ராசியான எண் 5 என ஜோதிடர் கூறியுள்ளதாக தினகரன் பேசிய ஆடியோ உள்ளது என போலீசார் கூறியுள்ளனர். மே 5ஆம் தேதியை தேர்தல் நடத்துமாறு நிர்ணயம் செய்யுமாறு தினகரன் கூறியுள்ளார்,

ஜாமீன் தர எதிர்ப்பு

ஜாமீன் தர எதிர்ப்பு

சுகேஷ் சந்திரசேகருக்கு ஜாமீன் தர போலீசார் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து இந்த வழக்கு மே 22ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Election Commission has slapped another new charge on TTV Dinakaran in bribery case.
Please Wait while comments are loading...