For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திட்டக் குழு கலைப்பு- புதிய அமைப்பில் 8 பேர் உறுப்பினர்கள்?

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: திட்டக் குழுவை கலைத்துவிட்டு மத்திய அரசு உருவாக்க நினைத்துள்ள புதிய அமைப்பில் 8 பேர் வரை உறுப்பினர்கள் இடம்பெறக் கூடும் என்று டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டில் கடந்த 64 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் திட்டக்குழுவைக் கலைத்து விட்டு, புதிய அமைப்பு ஒன்றை உருவாக்கப் போவதாக பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர தின உரையில் தெரிவித்தார்.

இந்த புதிய அமைப்பு தற்போதைய பொருளாதார சவால்கள், இயற்கை வளங்களின் மேம்பாடு, மத்திய மாநில அரசுகளுக்கு இடையேயான உறவை வலுப்படுத்துதல் போன்றவற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட இருக்கிறது.

பொதுமக்கள் ஆலோசனை

பொதுமக்கள் ஆலோசனை

அத்துடன் இந்த புதிய அமைப்பு குறித்து பொதுமக்களும் ஆலோசனை கூறலாம் என மோடி தலைமையிலான மத்திய அரசு அறிவித்திருந்தது.

15 நாட்களில்?

15 நாட்களில்?

இந்நிலையில் இந்த புதிய அமைப்பு அடுத்த 15 முதல் 20 நாட்களில் அமைக்கப்படும் என கூறப்படுகிறது.

8 பேர் நிரந்தர உறுப்பினர்கள்?

8 பேர் நிரந்தர உறுப்பினர்கள்?

இந்த அமைப்பில் பொருளாதார நிபுணர்கள், சமூக ஆர்வலர்கள், விஞ்ஞானிகள் என 4 பேரும் பிற துறை வல்லுநர்கள் 4 என மொத்தம் 8 பேர் பேர் நிரந்தர உறுப்பினர்களாக இருப்பார்களாம்.

ஆலோசனைக் கூட்டம்

ஆலோசனைக் கூட்டம்

இதனிடையே திட்டக் குழுவின் புதிய அமைப்பின் கட்டமைப்பு உள்ளிட்டவை குறித்த ஆலோசனைக் கூட்டம் வரும் 26-ந் தேதி நடைபெற உள்ளது.

திட்டக் குழு துணைத் தலைவர்கள்

திட்டக் குழு துணைத் தலைவர்கள்

திட்டக்குழு நடத்தும் இக் கூட்டத்தில் பங்கேற்க வருமாறு அதன் முன்னாள் துணைத் தலைவர்கள், உறுப்பினர்கள் ஆகியோருக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

English summary
After Prime Minister Narendra Modi decided to scrap the Planning Commission, sources in the central government tell that the panel will be replaced by an eight-member think tank.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X