For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தேர்தல் ரெய்டு.. நாடு முழுவதும் இதுவரை ரூ. 195 கோடி பறிமுதல்

|

டெல்லி: நாடு முழுவதும் தேர்தல் ஆணையம் நடத்திய ரெய்டுகளில் கிட்டதட்ட 195 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் தேர்தல் ஆணையம் மேற்கொண்ட கடும் நடவடிக்கைகளிலும், வாகன சோதனைகளிலும் இதுவரை 195 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து இன்று தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தேர்தல் ஆணையம் பணம் பறிமுதல் பட்டியலில் ஆந்திர மாநிலம் முதலிடம் வகிக்கிறது. அம்மாநிலத்தில் மட்டும் இதுவரை 118 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும் தமிழ்நாட்டில் ரூபாய் 18.31 கோடி, மகாராஷ்டிராவில் ரூபாய் 14.40 கோடி, உத்தர பிரதேசத்தில் ரூபாய் 10.46 கோடி, பஞ்சாபில் ரூபாய் 4 கோடி என்று பலகோடி ரூபாய் பணம் தேர்தல் ஆணையத்தால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதுதவிர 26.56 லட்சம் லிட்டர் மதுபானம், 70 கிலோ ஹெராயின் கைப்பற்றப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இது சம்பந்தமாக 11469 முதல் தகவலறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பறிமுதல் வேலைக்காக நாடு முழுவது சுமார் 659 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.கணக்கில் வராத பணம் அனைத்தும் வருமான வரித்துறையை சார்ந்து விடும்.

English summary
Election flying squad retrieved the black money nearer to 195 crores in the election time checking.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X