For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காஷ்மீரில் தீவிரவாதிகள் மீண்டும் தாக்குதல்.. இந்திய ராணுவம் பதிலடி.. பதற்றம்!

ஜம்மு காஷ்மீர் எல்லையில் இந்திய ராணுவம் மீது பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள்.

Google Oneindia Tamil News

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் எல்லையில் இந்திய ராணுவம் மீது பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள்.

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் இப்போதுதான் தணிந்துள்ளது. பாகிஸ்தான் அரசு அந்நாட்டில் சிறைப்பட்டு இருக்கும் இந்திய விமானி அபிநந்தனை விடுவிக்க போவதாக அறிவித்தது. நேற்று இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்தே எல்லையில் நீடித்து வந்த பதற்றம் முடிவிற்கு வந்தது.

 Encounter underway between terrorists and security forces in Kupwara, Kashmir

இந்த நிலையில் இன்று அபிநந்தன் இந்தியா திரும்ப உள்ளார். இந்த நல்ல வேளையில்தான் தற்போது இந்திய எல்லையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் மீண்டும் தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள்.

இன்று அதிகாலை தொடங்கிய தாக்குதல் 7.10 மணி வரை தொடர்ந்து நடைபெற்றது. சுமார் 45 நிமிடம் இந்த தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது. குப்வாரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருந்து தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள்.

[Read more: அடுத்த திருப்பம்.. தடை செய்யப்பட்டது பழமையான ஜமாத் - இ - இஸ்லாமி இயக்கம்.. மத்திய அரசு அதிரடி!]

இந்திய ராணுவ முகாமை நோக்கி, பாகிஸ்தான் ராணுவம் கையெறி குண்டுகளை வீசி தாக்கி உள்ளது. அதேபோல் துப்பாக்கி மூலம் சரமாரியாக சுட்டு இருக்கிறார்கள். இதனால் இந்திய ராணுவம் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்தது.

இந்திய ராணுவமும் தீவிரவாதிகளை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தியது. இதனால் அங்கு நீண்ட நேரம் கடுமையான சண்டை நடைபெற்றது. தற்போது இந்த சண்டை முடிவிற்கு வந்துள்ளது. இந்த தாக்குதல் காரணமாக ஏற்பட்ட பாதிப்பு குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

English summary
#JammuAndKashmir : Encounter underway between terrorists and security forces in Kupwara district's Handwara area. Two to three terrorists believed to be trapped.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X