பாஜகவின் தமிழகத்து தலையாட்டி பொம்மைகள் ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் : சி.ஆர்.சரஸ்வதி தாக்கு

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூரு : மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக அரசுக்கு தலையாட்டி பொம்மைகளாக செயல்படவே ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் அணி உள்ளது என்று டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர் சி.ஆர்.சரஸ்வதி தெரிவித்து உள்ளார்.

பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவை இன்று டி.டி.வி தினகரனின் ஆதரவாளர்கள் சந்தித்து பேசினர். சந்திப்புக்கு பிறகு வெளியே வந்த சி.ஆர்.சரஸ்வதி செய்தியாளர்களிடம் பேசினார். சில கேள்விக்கு பதிலளித்தார் சிஆர் சரஸ்வதி.

EPS and OPS are Staple Toys of BJP says CR Saraswathi

டி.டி.வி தினகரனுக்கு தமிழகத்தில் அமோக ஆதரவு எழுந்து இருக்கிறது என்பதை அறிந்து சசிகலா மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். அவர் சிறையில் நலமாக உள்ளார் என்று தெரிவித்தார்.

உள்ளாட்சி தேர்தல் எப்போது வைத்தாலும் அதை சந்திக்க நாங்கள் தயாராக உள்ளோம். ஆனால், ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் இருவரும் தான் பயந்து வருகிறார்கள்.

இது தோல்வியின் காரணமான பயமா அல்லது பாஜகவின் உத்தரவு வரவில்லையே என்பதற்கான காத்திருப்பா என்று அவர்கள் தான் விளக்கவேண்டும்.

பாஜக தாங்கள் நினைத்ததை எல்லாம் செய்து எப்படியாவது தமிழ்நாட்டிற்குள் நுழைந்துவிட வேண்டும் என்று ஈ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் இருவரையும் தலையாட்டி பொம்மைகளாக்கி வைத்திருக்கிறது. ஆனால் பாஜக வெற்றி பெற அண்ணன் டி.டி.வி. தினகரன் ஒருபோதும் அனுமதிக்கமாட்டார்.

எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் உருவாக்கிய அதிமுக ஆட்சியில் இருக்கும் போது, பிரதமர் மோடி படம் போட்டு காலண்டர் அச்சடிக்கும் அவலத்தை எங்கு போய் சொல்வது என்று கேள்வி எழுப்பி உள்ளார். மேலும், உள்ளாட்சி தேர்தலின் தோல்வி பயம் காரணமாகவே அதில் சட்டதிருத்தம் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது என்றும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
TTV Dinakaran loyalist and spokes person CR Saraswathi saind, EPS and OPS are Staple Toys of BJP . She also added that TTV Dhinakaran team is always ready to face the Local Body elections.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற