ம.பியில் முன்னாள் ராணுவ வீரர் கழுத்தறுத்து கொலை... துப்பு கிடைக்காமல் போலீஸ் திணறல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

போபால்: மத்திய பிரதேச மாநிலம் போபாலில் முன்னாள் விமானப்படை ராணுவ வீரரும் அவரது மனைவியும் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

கொல்லப்பட்ட விமானப்படை ராணுவ வீரர் கோபி நாயரும், அவரது மனைவி கோமதி உடலும் தற்போது பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது. போலீஸ் இதில் விசாரித்து வருகிறது.

முதலில் அவர்கள் வீட்டு வேலைக்கார பெண்தான் போலீசுக்கு தகவல் கொடுத்து இருக்கிறார். போலீஸ் வரும் முன் பக்கத்து வீட்டு காரர்களை உதவிக்கு அழைத்துள்ளார்.

உள்ளே வந்தார்கள்

உள்ளே வந்தார்கள்

இந்த நிலையில் பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் ஜன்னலை உடைத்து உள்ளே சென்று இருக்கிறார்கள். அப்போதுதான் இரண்டு பேரும் கொலை செய்யப்பட்டு கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த அறை முழுக்க ரத்தம் ஓடிக்கிடந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்கள்.

பரிசோதனை

பரிசோதனை

பிரேத பரிசோதனையில் இவர்கள் கழுத்து மோசமாக அறுக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கண்டிப்பாக இது தற்கொலை இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். கொல்லப்படுவதற்கு முன்பு அவர்கள் தாக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று கூறியுள்ளார்கள்.

திருடி இருக்கிறார்களா?

திருடி இருக்கிறார்களா?

போலீஸ் அவர்கள் வீட்டை சோதனையிட்டு இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் வீட்டில் எதுவுமே திருடு போகவில்லை . இதனால் இந்த கொலைக்கு வேறு ஏதாவது முன் விரோதம் இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

வேறு கோணம்

வேறு கோணம்

ராணுவம் சம்பந்தமான பிரச்சனை இதில் இருக்கலாம் என்று போலீசார் சந்திக்கிறார்கள். இதனால் இவர் பணி செய்த ராணுவ தளவாடங்களில் விசாரிக்க இருக்கிறார்கள். அதே சமயம் இதில் துப்பு கொடுப்பவர்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் சன்மானம் அளிக்கப்படும் என்று கூறியுள்ளார்கள்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Ex Army man named Gopi Nair and his wife Gomathi killed by unknown in Madhya Pradesh.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற