For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முன்னாள் அட்டார்னி ஜெனரல் வாகன்வதி காலமானார்

Google Oneindia Tamil News

Ex-attorney general Vahanvati dead
மும்பை: மத்திய அரசின் முன்னாள் அட்டார்னி ஜி.இ.வாகன்வதி மாரடைப்பால் நேற்று மரணமடைந்தார். அவருக்கு வயது 65.

கடந்த காங்கிரஸ் ஆட்சியில் அட்டார்னி ஜெனரல் ஆக நியமிக்கப்பட்டவர் ஜி.இ.வாகன்வதி. மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் கடந்த மே 27-ந் தேதி வாகன்வதி தனது அட்டார்னி பதவியை ராஜினாமா செய்தார்.

இவர் இந்திய சட்டத்துறை உயர் அதிகாரியாக நியமிக்கப்பட்ட முதல் இஸ்லாமியர் என்ற பெருமைக்கு உரியவர். சொலிசிட்டர் ஜெனரலாக 5 ஆண்டுகளும், அதற்கு முன்பு மராட்டிய மாநில அரசின் அட்வகேட் ஜெனரலாகவும் வாகன்வதி பணியாற்றியுள்ளார்.

சமீபகாலமாக நுரையீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த வாகன்வதி, சிகிச்சைக்காக மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் நேற்று வாகன்மதிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து சிகிச்சை பலனின்றி வாகன்மதி மரணமடைந்தார்.

மறைந்த வாகன்மதிக்கு மனைவியும், ஒரு மகனும் உள்ளனர்.

English summary
Legal luminary and former attorney general of India Goolamhoossein Essaji Vahanvati died following cardiac arrest at a private hospital here Tuesday evening, official sources said. He was 65.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X