For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆப்ஸ் வந்தாலும் 11.2 கோடி யூஸர்களுடன் இந்தியாவில் கிங்காக இருக்கும் ஃபேஸ்புக்

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: ஃபேஸ்புக்கில் கடந்த ஏப்ரல் மாதம் 100 மில்லியன் இந்திய யூஸர்கள் இருந்தனர். இந்த எண்ணிக்கை கடந்த செப்டம்பரம் மாதம் 112 மில்லினாக அதிகரித்துள்ளது.

எத்தனை மொபைல் அப்ளிகேஷன்கள் வந்தபோதிலும் ஃபேஸ்புக்கை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது. அமெரிக்காவை அடுத்து அடுத்தபடியாக அதிக அளவில் ஃபேஸ்புக்கை பயன்படுத்தும் நாடு இந்தியா.

ஃபேஸ்புக்கை உலக அளவில் 1.35 பில்லியன் பேர் பயன்படுத்துகிறார்கள். அதில் 864 மில்லியன் பேர் ஃபேஸ்புக்கை தினமும் பயன்படுத்தி வருகிறார்கள்.

இந்தியா

இந்தியா

இந்தியாவில் ஃபேஸ்புக்கை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை கடந்த ஏப்ரல் மாதம் 100 மில்லியனாக இருந்தது. இந்த எண்ணிக்கை கடந்த செப்டம்பர் மாதம் 112 மில்லியனாக அதிகரித்துள்ளது. 52 மில்லியன் பேர் தினமும் ஃபேஸ்புக்கை பயன்படுத்துகிறார்கள்.

செல்போன்

செல்போன்

இந்தியாவில் ஃபேஸ்புக்கை பயன்படுத்தும் 112 மில்லியன் பேரில் 99 மில்லியன் பேர் மாதத்தில் குறைந்தது ஒரு முறையாவது தங்கள் செல்போனில் ஃபேஸ்புக்கை பயன்படுத்துகிறார்கள்.

ஃபேஸ்புக்

ஃபேஸ்புக்

45 மில்லியன் இந்தியர்கள் தங்கள் நண்பர்களுடன் தினமும் தொடர்பில் இருக்க செல்போனில் ஃபேஸ்புக்கை பயன்படுத்துகிறார்கள்.

ஆய்வு

ஆய்வு

இன்டர்நெட் பயன்படுத்துவது பற்றி ஃபேஸ்புக் ஒரு ஆய்வை நடத்தியது. அந்த ஆய்வில் கலந்து கொண்டவர்களில் 77 சதவீதம் பேர் இன்டர்நெட் இல்லாமல் வெளியே செல்ல முடியாது என்று தெரிவித்துள்ளனர். இன்றைய இளைஞர்கள் டிவி பார்க்கையில் செல்போன் பயன்படுத்த விரும்புவதும் தெரிய வந்துள்ளது.

English summary
Growing internet penetration and a large youth population has helped world's largest social network platform Facebook expand its user base in India to 112 million - the second largest after the US.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X