
உத்தரகண்டில் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ பிடித்ததால் பரபரப்பு!
டேராடூன்: டெல்லியில் இருந்து டேராடூன் நோக்கி சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் உடனடியாக அபாய சங்கிலியை பிடித்து ரயிலை நிறுத்தினார்கள்.
பயணிகள் உடனடியாக கீழே இறக்கி விடப்பட்டனர்.யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று உத்தரகண்ட் டிஜிபி அசோக் குமார் தெரிவித்தார்.

தலைநகர் டெல்லியில் இருந்து உத்தரகண்ட் மாநிலம் டேராடூன் நோக்கி சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு சென்றது. கன்ஸ்ரோ ரயில் நிலையம் அருகே ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது ரயிலின் சி 4 பெட்டியில் திடீரென தீப்பற்றியது. இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் உடனடியாக அபாய சங்கிலியை பிடித்து ரயிலை நிறுத்தினார்கள்.

அந்த பகுதியில் உள்ள தீயணைப்பு படையினர், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பெட்டியில் பற்றி எரிந்த தீ அணைக்கப்பட்டது. அதில் இருந்த பயணிகள் உடன்டியாக கீழே இறக்கி விடப்பட்டனர். யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை என்று உத்தரகண்ட் டிஜிபி அசோக் குமார் தெரிவித்தார்.இதனை தொடர்ந்து தீப்பற்றிய பெட்டி மட்டும் தனியாக பிரிக்கப்பட்டது. மற்ற பெட்டிகளில் பயணிகள் ஏற்றப்பட்டு ரயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.