For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எங்கு போனாலும் நீங்கள் தப்ப முடியாது..!

Google Oneindia Tamil News

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் தீவிரவாதிகளால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட போலீஸ் அதிகாரி பெரோஸ் தர் தனது முகநூலில் 2013ம் ஆண்டு மரணம் குறித்தும், தீவிரவாதிகள் குறித்தும் எழுதியிருந்த பதிவு அனைவரையும் நெகிழ்ச்சி அடைய வைப்பதாக உள்ளது.

வெள்ளிக்கிழமையன்று அசாபல் பகுதியில் திடீரென புகுந்த 5 தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் தர் உள்பட 6 போலீஸார் கொல்லப்பட்டனர். தர் முகத்தில் குண்டுகளைப் பாய்ச்சி கோழைத்தனமாக சுட்டுக் கொன்றிருந்தனர் தீவிரவாதிகள்.

First night in the grave: Cop martyred in J&K had written this poem

இந்த நிலையில் தனது மகனை தூக்கிப் பிடித்தபடி தர் காட்சி தரும் புகைப்படமும், பேஸ்புக்கில் அவர் எழுதிய பழைய பதிவு ஒன்றும் இப்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

First night in the grave: Cop martyred in J&K had written this poem

தர் 2013ம் ஆண்டு எழுதிய அந்தப் பதிவு..

எப்போதாவது கல்லறையில் நின்று ஒரு நிமிடம் யோசித்திருப்பீர்களா?
உங்களை நீங்களே கேட்டுக் கொண்டிருப்பீர்களா?
கல்லறையில் முதல் நாள் இரவில் எனக்கு என்ன நடக்கும் என்று உங்களை நீங்களே கேட்டிருப்பீர்களா?
உங்களது உடலை குளிப்பாட்டி சுத்தம் செய்து கல்லறைக்குக் கொண்டு போகும் அந்த தருணத்தை யோசித்தீர்களா?
உங்களது கல்லறையைச் சுற்றிலும் உங்களுக்குப் பிரியமானவர்கள் கதறி அழுவதை நினைத்துப் பாருங்கள்
உங்களது குடும்பம் கதறி அழும் காட்சியை யோசித்துப் பாருங்கள்
உங்களை கல்லறையில் கிடத்தும் அந்த தருணத்தை யோசித்துப் பாருங்கள்
உங்களது கல்லறைக்குள் நீங்கள் மட்டும்.. யோசித்துப் பாருங்கள்
உள்ளே கும்மிருட்டு
நீங்கள் மட்டும் உள்ளே
கதறி அழுதாலும் உதவிக்கு யாரும் கிடையாது
உங்களது எலும்புகள் அந்த குறுகிய இடத்தில் குறுக்கிக் கொண்டு..
5 வேளை தொழுகையை நீங்கள் தவற விட்டதற்காக வருத்தப்படுவீர்கள்
இசையைக் கேட்க முடியாததற்காக வருத்தப்படுவீர்கள்
ஹிஜாப் அணிய முடியவில்லையே என்று வருத்தப்படுவீர்கள்
அல்லாவின் உத்தரவுகளை புறக்கணித்ததற்காக வருத்தப்படுவீர்கள்
ஆனால் நீங்கள் தப்ப முடியாது
நீங்களும் நீங்கள் செய்த காரியங்களும் மட்டுமே உங்களுடன் இருக்கும்
நகையோ, பணமோ உடன் இருக்காது.. நீங்கள் செய்த காரியம் மட்டுமே.
கடவுள் நம்மை கல்லறைக்குப் போகும் தண்டனையிலிருந்து காக்கட்டும்.

English summary
Dar in 2013 had written a poem and posted it on his Facebook wall. He begins by saying, " did you ever stop for a while and asked (sic) yourself, what is going to happen to me the first night in my grave. He also wrote about about families will be crying when one is being laid to rest in the grave.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X