For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சசிகலாவை சந்திக்க முதல்முறையாக அனுமதி மறுப்பு... அப்படியே ஷாக்கான தினகரன்

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

பெங்களூர்: பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலாவை சந்திக்க தினகரனுக்கு முதல் முறையாக அனுமதி மறுக்கப்பட்டது.

பெங்களூர் சிறையில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலாவுக்கு சலுகைகள் வழங்கப்படுவதாக சிறை துறை டிஐஜியாக ரூபா அம்பலத்தினார். மேலும் சசிகலாவும், இளவரசியும் ஷாப்பிங் சென்றுவிட்டு ஹாயாக வரும் வீடியோ காட்சிகளு்ம வெளியாகின.

First time Prisons dept refuses Dinakaran to meet Sasikala

மேலும் சசிகலாவை அதிகமான பார்வையாளர்கள் சந்திக்க அனுமதிக்கப்பட்டதாகவும், அவர்கள் பெரும்பாலும் நேரம் தவறியே வந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

சிறை முறைகேட்டில் தொடர்புடைய இரு அதிகாரிகளும், அதை அம்பலப்படுத்திய பெண் அதிகாரியும் இடமாற்றம் செய்யப்பட்டனர். சிறை முறைகேடு குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற அதிகாரி வினய் குமார் விசாரணை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் இந்த புகார்களுக்கு பிறகு, முதல்முறையாக சசிகலாவை சந்திக்க தினகரன் பெங்களூர் புறப்பட்டார். அங்கு சிறைக்கு சென்ற அவரது காரை 500 மீட்டர் தூரத்திலேயே நிறுத்துமாறு காவலர்கள் கூறியதால் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

பிறகு நடந்தே சிறை உள்ள வளாகத்துக்குள் சென்றார். அங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக விதிக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பொதுவாக சிறை கைதிகளை அவர்களது உறவினர்கள் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை தான் சந்திக்க முடியும்.

ஆனால் தினகரன் நேரம் தவறி வந்ததால் அவருக்கு முதல் முறையாக அனுமதி மறுக்கப்பட்டது. சிறையில் நடந்த முறைகேடுகள் அம்பலமானதால், விதிமுறைகளில் அதிகாரிகள் சமரசம் செய்து கொள்ளவில்லை. இதனால் அரை மணி நேரம் காத்திருந்து விட்டு சென்றுவிட்டார். இது அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Prison department denies to permit TTV Dinakaran to meet Sasikala after visiting hours. Dinakaran get shocked and returned out from the Jail.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X