For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

2022-23ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை பிப். 1ம் தேதி தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்!

By
Google Oneindia Tamil News

புதுடெல்லி: 2022-23ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1ம்தேதி தாக்கல் செய்யவிருக்கிறார்.

இந்திய நாடாளுமன்றத்தின் 2022-23 நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 31-ம் தேதி தொடங்கவிருக்கிறது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் பிப்ரவரி 1-ம் தேதி பட்ஜெட்டை தாக்கல் செய்யவிருக்கிறார். இது அவர் தாக்கல் செய்யும் நான்காவது பட்ஜெட். பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்து தாக்கல் செய்யும் பத்தாவது பட்ஜெட் இது.

ஒவ்வொரு ஆண்டும் மத்திய பட்ஜெட், ஒவ்வொரு துறைக்கும் தேவையான திட்டங்களை வகுத்து அதற்கு தகுந்தாற்போல் தயாரிக்கப்படும். அது மத்திய அரசின் உத்தேசிக்கப்பட்ட வரவு செலவுகளின் பட்டியலாக இருக்கும். .

'பவர்புல் நிர்மலா..' உலகின் சக்திவாய்ந்த பெண்கள் லிஸ்ட்டில் நிதியமைச்சர்.. 3வது முறையும் சாதனை'பவர்புல் நிர்மலா..' உலகின் சக்திவாய்ந்த பெண்கள் லிஸ்ட்டில் நிதியமைச்சர்.. 3வது முறையும் சாதனை

பட்ஜெட்

பட்ஜெட்

ஜனாதிபதி ராம்நாத் கோவிந் உரையாற்றி இந்த பட்ஜெட் கூட்டத்தொடரை துவங்கி வைப்பார். பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பாதி ஜனவரி 31 முதல் பிப்ரவரி 11 வரையிலும், இரண்டாவது பாதி மார்ச் 14 முதல் ஏப்ரல் 8 வரையிலும் நடைபெறும். பட்ஜெட்டுக்கு ஒரு நாள் முன்னதாக, மத்திய அரசு பொருளாதார ஆய்வறிக்கையையும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வாய்ப்புள்ளது.

பொருளாதாரம்

பொருளாதாரம்

கொரோனாவால் நலிவடைந்த இந்திய பொருளாதாரம் தற்போது சீரான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இந்தியப்பொருளாதாரம் வளரும் சூழலில் இந்த‌ ஆண்டு பட்ஜெட் கூட்டத் தொடர் வரவுள்ளது. அதேபோல், ரிசர்வ் வங்கி நடப்பு நிதியாண்டிற்கான GDP வளர்ச்சியை 9.5 சதவீதமாகத் தக்கவைத்துள்ளது, ஆனால் பொருளாதார வளர்ச்சி தன்னிறைவு பெறாமல் இருக்கிறது. மேலும் பொருளாதாரம் வலுவாக இல்லை என்றும் எச்சரித்துள்ளது.

 காகிதம் இல்லா பட்ஜெட்

காகிதம் இல்லா பட்ஜெட்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த மாதம் மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதி அமைச்சர்களுடன் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். இதில், மாநிலங்களுக்குத் தேவையான திட்டங்கள், துறைகளுக்கு தேவையான வளர்ச்சிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. கடந்த ஆண்டு காகிதம் இல்லாமல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் வடிவம் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

டிஜிட்டல்

டிஜிட்டல்

கடந்த ஆண்டு நிர்மலா சீதாராமன் ஆவணங்களின்றி தமது டிஜிட்டல் பட்ஜெட்'-ஐ 'பஹி காட்டா' கணக்கு லெட்ஜர்களுக்கு பதிலாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட‌ டேப்லெட்டில் படித்து பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்.

English summary
Union budget 2022: Finance Minister Nirmala Sitharaman will present the Union Budget for 2022-23 on February 1st.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X