Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் லாலு குற்றவாளி... தப்பிய மிஸ்ரா - வழக்கு கடந்து வந்த பாதை

மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் இருந்து பீகார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என்று ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்து உள்ளது.

Subscribe to Oneindia Tamil

ராஞ்சி: மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்து உள்ளது. பீகார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என்று ஜெகன்நாத் மிஸ்ராவை விடுதலை செய்து ராஞ்சி சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

1990ஆம் ஆண்டு பீகார் முதல்வராக லாலு பிரசாத் யாதவ் பதவி வகித்தபோது மாட்டுத்தீவன ஊழலில் சிக்கினார். சுமார் 950 கோடி ரூபாய் அவர் ஊழல் செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டது.

பீகாரின் ஒரு பகுதியாக இருந்து, தற்போது ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள சாய்பாசா மாவட்ட கருவூலத்தில் மாட்டுத்தீவனம் தொடர்பான போலி பில்களை அளித்து ரூ.37.7 கோடி ஊழலில் ஈடுபட்டதாக லாலு பிரசாத் உள்ளிட்டவர்கள் மீது ஒரு வழக்கு பதிவானது.

லாலு பிரசாத் யாதவ்

லாலு பிரசாத் யாதவ்

இந்த வழக்கில் மாஜி முதல்வர் லாலு பிரசாத் யாதவ் உடன், பீகார் முன்னாள் முதல்வர் ஜெகன்நாத் மிஸ்ரா, ஐக்கிய ஜனதாதள எம்.பி. ஜெகதீஷ் சர்மா உள்ளிட்ட மேலும் 44 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். கடந்த 2013ஆம் ஆண்டு லாலுவுக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

லாலுவின் அரசியல் வாழ்க்கை

லாலுவின் அரசியல் வாழ்க்கை

1994-95-ல் சைபாசா கருவூலத்திலிருந்து 78 போலி ஒதுக்கீடு கடிதங்கள் மூலம் லாலு ரூ.37.7 கோடி பணம் எடுத்துள்ளார். இதற்காக அவருக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. அவரது அரசியல் வாழ்க்கையே அஸ்தமனமானது. லாலு பிரசாத் யாதவ் 11 ஆண்டுகளுக்கு தேர்தலில் நிற்க முடியாத நிலை ஏற்பட்டது.

சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல்

சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல்

இந்தத் தீர்ப்பை எதிர்த்து, லாலு பிரசாத் ஜார்கண்ட் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் லாலு பிரசாத்தை விடுதலை செய்தது. ஜார்கண்ட் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சிபிஐ தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

9 மாதத்தில் விசாரணை

9 மாதத்தில் விசாரணை

இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, லாலு பிரசாத் மீதான ஊழல் வழக்கை மீண்டும் விசாரிக்க ஜார்கண்ட் உயர்நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிபிஐ தரப்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று ஒன்பது மாதத்திற்குள் விசாரணையை முடிக்கவும் உத்தரவிட்டுள்ளது.
பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இரண்டு முறை பணம்

இரண்டு முறை பணம்

உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சிபிஐ வழக்கு தொடர்ந்த போது, இரண்டு பணம் எடுப்புகளும் இருவேறு காலக்கட்டத்தில் நடந்துள்ளது, இரண்டு தடவைகளிலும் நிதி நஷ்டம், பாதிக்கப்பட்ட நபர்கள், பயனடைந்த நபர்கள் வேறு வேறு. எனவே பிரிவு 300 என்பதை இதில் கொண்டு வர முடியாது என்று சிபிஐ வாதிட்டது.

முறைகேடாக பணம்

முறைகேடாக பணம்

இதனையடுத்து தற்போது இரண்டு குற்றங்களும் வேறு வேறு எனக் கொண்டு உச்ச நீதிமன்றம் மீண்டும் விசாரணையைத் தொடங்க உத்தரவிட்டது. இந்த நிலையில் மாட்டு தீவனம் வாங்குவதற்கு தும்கா பகுதியில் உள்ள அரசு கருவூலத்தில் இருந்து, ரூ3.31 கோடி முறைகேடாக எடுக்கப்பட்டது தொடர்பான வழக்கு ராஞ்சியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது.

3 வழக்குகள் விசாரணை

3 வழக்குகள் விசாரணை

ராஞ்சி சிபிஐ நீதிமன்றத்தில் வழக்கு எண் ஆர்சி 64ஏ/96 மற்றும் ஆர்சி 38ஏ/96 தொடர்பாக நீதிபதி ஷிவ்பால் சிங் முன்னரும், வழக்கு எண் ஆர்சி 68ஏ/96 தொடர்பாக நீதிபதி எஸ்.எஸ். பிரசாத் முன்னரும், வழக்கு எண் ஆர்சி 47ஏ/96. தொடர்பாக நீதிபதி பிரதீப் குமார் விசாரித்து வந்தனர்.

மாஜி முதல்வர்கள் தலைவிதி

மாஜி முதல்வர்கள் தலைவிதி

இந்த வழக்கில் ராஞ்சி சிபிஐ நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. வழக்கு எண் ஆர்சி 64ஏ/96 விசாரணை முடிவடைந்துள்ள நிலையில் சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஷிவ்பால் சிங் இன்று தீர்ப்பளித்தார். பீகார் மாநிலத்தின் மாஜி முதல்வர் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என்றும் ஜெகன்நாத் மிஸ்ரா விடுவிக்கப்பட்டுள்ளார். 1996 ல் தொடங்கிய இந்த ஊழல் வழக்கின் பயணம் 21 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. 17 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு அளித்த நீதிமன்றம் 6 பேர் விடுதலை செய்தது. தண்டனை விவரம் ஜனவரி 3ம் தேதி அறிவிக்கப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+