For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இனி பயமில்லாமல் “பேஸ்புக்” பக்கங்களில் கருத்து தெரிவிக்கலாம் – சுப்ரீம் கோர்ட் அதிரடி

Google Oneindia Tamil News

டெல்லி: சமூக வலைதளங்களின் மூலமாக கருத்துகளை வெளியிடுபவர்கள் கைது செய்யப்படக் கூடாது என்ற அதிரடி உத்தரவினை உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

"தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 66 ஏ பிரிவு உடல் ரீதியாகவோ அல்லது கலாசார ரீதியாகவோ பிறரை மிரட்டி இடையூறு செய்ய நினைப்பவர்கள் மேல் தான் பாய வேண்டுமே தவிர சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிப்பவர்கள் மீது பாயக் கூடாது" என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசும் தன் தரப்பு கருத்தை பதிவு செய்தது. இதையடுத்து இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது உச்சநீதிமன்றம்.

Free speech stance on social media: Modi sarkar breaks from UPA, to rethink Section 66A

பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களிலும் தகவல் தொழில்நுட்ப ஊடகங்களான மொபைல் போன் எஸ்.எம்.எஸ் மற்றும் இமெயில் போன்றவற்றில் ஒருவர் தெரிவிக்கும் கருத்து பதிவு செய்யும் விஷயங்கள் ஒரே நேரத்தில் பலரையும் சென்றடைகின்றன.

அத்தகைய கருத்துக்களால் பாதிக்கப்பட்டதாக கருதும் நபர்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவானவர்கள் அந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததும் தகவல் தொழில்நுட்ப சட்டம் - 66ஏயின்படி கருத்து தெரிவித்தவர்கள் கைது செய்யப்படுகின்றனர்.

"இவ்வாறு கைது செய்யப்படுவது அரசியல் அமைப்புச் சட்டம் நமக்கு வழங்கியுள்ள கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது" என சுப்ரீம் கோர்ட்டில் சிலர் வழக்கு தொடர்ந்திருந்தனர். அந்த வழக்கில் மத்திய அரசு நேற்று முன்தினம் தன் கருத்தை பதிவு செய்தது.

இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், "சமூக வலைதளங்களில் தகவல் தொடர்பு சாதனங்களில் தனிநபர்களால் பதிவு செய்யப்பட்ட கருத்துகளுக்கு அரசியல் எதிர்ப்பு விமர்சனங்கள் வந்தன என்பதற்காக அத்தகைய கருத்துக்களை பதிவு செய்பவர்களை கைது செய்வதோ தண்டிப்பதோ கூடாது என்பது தான் அரசின் இப்போதைய எண்ணம்.

உதாரணமாக டுவிட்டர் வலைதளத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பில் சேருங்கள் என வலைதளங்களில் யாராவது பிரசாரம் செய்தால் அவர்கள் மீது தகவல் தொழில்நுட்ப சட்டம் - 66 ஏ படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இணையம் என்ற இந்த ஒரு ஊடகம் மட்டும் தான் தணிக்கை இல்லாத ஊடகமாக இருக்கிறது; அது தொடர வேண்டும்.

சில சமயங்களில் நாட்டின் நலன், பாதுகாப்பு போன்ற விவரங்களில் சர்ச்சைக்குரிய பதிவுகளை அகற்றக் கோரி வலைதள நிறுவனங்களை அரசு கேட்டுக் கொள்ளத் தான் செய்யும். அதை தவறு என கூற முடியாது. எல்லா நாடுகளிலும் அந்த நடைமுறை உள்ளது" என்று தெரிவித்தனர்.

வலைதள நிறுவனங்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் ''அரசியல் காரணங்களுக்காக கருத்து சுதந்திரம் பறிக்கப்படக் கூடாது. சமூக வலைதளங்களில் சுதந்திரமாக கருத்து தெரிவிக்க அனைவருக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும். கருத்து பதிவு செய்ததற்காக கைது போன்ற நடவடிக்கைகள் சர்வாதிகார நடவடிக்கைகள்'' என்றார்.

தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 66 ஏ பிரிவில் மாற்றம் முந்தைய மன்மோகன் சிங் அரசில் கொண்டு வரப்பட்டது. அதை மாற்ற வேண்டும் என இப்போதைய மோடி அரசு முனைந்துள்ளது.

இதற்கு பின்னணியில் பிரதமர் மோடி தான் உள்ளார் என்ற கருத்தும் தெரிய வந்துள்ளது. கருத்து சுதந்திரத்திற்கு எதிரான அந்த பிரிவு நீக்கப்பட வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியதன் அடிப்படையிலேயே மேற்கண்ட முடிவுக்கு மத்திய அரசு வந்துள்ளது. மத்திய அரசின் இந்த நிலைப்பாடு சமூக வலைதளங்களில் கருத்து பதிவு செய்பவர்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது.

English summary
Prime Minister Narendra Modi has reportedly instructed his government to re-look at Section 66A of the Information Technology (Amendment) Act, 2008 which has been at the centre of the freedom of speech debate in India. According to a report on The Indian Express, following 'direct intervention' from the Prime Minister, the Ministry of Communication and Information Technology has decided to frame guidelines that will prevent the law from being misused.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X