For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

2024 லோக்சபா தேர்தலில் 300 இடங்களில் காங்கிரஸ் வெல்ல முடியாது.. குலாம் நபி ஆசாத்

Google Oneindia Tamil News

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை மீண்டும் கொண்டு வர காங்கிரஸ் கட்சியால் முடியும். ஆனால் வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சி 300 இடங்களில் வெல்லும் என நான் நினைக்கவில்லை என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் 370ஆவது சட்டப்பிரிவை 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மோடி அரசு ரத்து செய்தது. இதையடுத்து ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்து அறிவித்தது.

இந்த முடிவுக்கு பல எதிர்ப்புகள் கிளம்பின. இதை திரும்ப பெற வேண்டும், மீண்டும் ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை வழங்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்தன.

பச்சை துரோகம்.. ஜெயலலிதா வீம்புக்கு செய்ததையே.. இப்ப ஓபிஎஸ் செய்தால்.. கி.வீரமணி எச்சரிக்கைபச்சை துரோகம்.. ஜெயலலிதா வீம்புக்கு செய்ததையே.. இப்ப ஓபிஎஸ் செய்தால்.. கி.வீரமணி எச்சரிக்கை

ஜம்மு காஷ்மீர்

ஜம்மு காஷ்மீர்

எனினும் மத்திய அரசு எதற்கும் அசரவில்லை. இந்த நிலையில் ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் நேற்று பேரணி நடந்தது. இதில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வருமான குலாம் நபி ஆசாத் பேசினார். அவர் கூறுகையில் பிரிவு 370 குறித்து உச்சநீதிமன்றம் மட்டுமே முடிவு செய்ய முடியும். இல்லாவிட்டால் ஆளும் பாஜக அரசு முடிவு செய்யலாம்.

பாஜக அரசு

பாஜக அரசு

ஆனால் சட்டத்தை ரத்து செய்ததே ஆளும் பாஜக அரசுதான் என்கிற போது அவர்கள் எப்படி மீண்டும் கொண்டு வருவார்கள்? இந்த முடிவை திரும்ப பெற காங்கிரஸுக்கு 300-க்கும் மேற்பட்ட எம்பிக்களின் ஆதரவு தேவை. தற்போதைய நிலையில் 2024 ஆம் ஆண்டு நடைபெறும் மக்களவைத் தொகுதிகளை கைப்பற்ற முடியும் என நான் நினைக்கவில்லை.

லோக்சபா

லோக்சபா

கடவுள் நினைத்தால் இது நடக்கும். ஆனால் வாய்ப்புகள் குறைவாகவே இருக்கின்றன என்றார். கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தது. இந்தியா சுதந்திரம் அடைந்து பெருமளவுக்கு நாட்டை ஆண்ட காங்கிரஸ் கட்சி வெறும் 19.3 சதவீதம் வாக்குகளையே பெற்றது. 44 இடங்களில் வென்றது.

மோசமான செயல்பாடு

மோசமான செயல்பாடு

இது காங்கிரஸ் கட்சியின் மிகவும் மோசமான செயல்பாடாகும். மிக பெரிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 59 இடங்களில் மட்டுமே வென்றது. லோக்சபாவில் எதிர்க்கட்சியாக செயல்பட ஒரு கட்சிக்கு 55 எம்பிக்கள் தேவை. ஆனால் அது காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்கவில்லை.

10 சதவீதம் சீட்டுகள்

அது போல் 2019ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக அரசு செய்த தவறுகளை சுட்டிக் காட்டி காங்கிரஸ் பிரச்சாரம் செய்தது. காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி நியமிக்கப்பட்டார். இதனால் கட்சி புத்துணர்வு பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் 52 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் வென்று. எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற சுமார் 10 சதவீதம் சீட்டுகளை இழந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

English summary
Congress Senior Leader Ghulam Nabi Azad says that Congress won win 300 seats in 2024 Loksabha polls.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X