For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தால் 2 ஆண்டு சிறை! சட்டம் கொண்டுவருகிறது மத்திய அரசு

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: தேர்தலின்போது வாக்காளர்களுக்கு லஞ்சப் பணம் கொடுப்பவர்களுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கும் வகையில் மத்திய அரசு சட்டத்திருத்தம் கொண்டுவர உள்ளது.

தேர்தல் சமயங்களில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது, தங்க நகை, ஆடைகள், பரிசுபொருட்கள் அளித்து வாக்கு கேட்கும் கலாசாரம் இந்தியாவில் வேகமாக பரவி நீக்கமற நிறைந்துவிட்டது.

வாரண்ட் வேண்டும்

வாரண்ட் வேண்டும்

தற்போதைய சட்டப்படி, வாக்காளர்களுக்கு பணம் அல்லது பொருள் லஞ்சமாக கொடுப்பது குறித்து புகார் செய்யப்படுவதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்படுகிறது. இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றவாளிக்கு ஒரு வருடம் சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படுகிறது. மேலும் ஒரு இடத்தில் ஏராளமான பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக உறுதியான தகவல் வந்தாலும், ‘வாரண்ட்' இல்லாமல் அந்த இடத்தை சோதனை போட முடியாத நிலை உள்ளது.

தேர்தல் கமிஷன் கோரிக்கை

தேர்தல் கமிஷன் கோரிக்கை

எனவே, 2012ம் ஆண்டிலேயே இதற்கான சட்டத்தை திருத்தி அமைக்க வேண்டும் என்று மத்திய உள்துறைக்கு, தலைமை தேர்தல் கமிஷன் பரிந்துரைத்தது. வேறு யாரும் புகார் தராமலேயே, வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுப்பதை நேரில் காணும் தேர்தல் அதிகாரி, தாமே முன்வந்து வழக்கு பதிவு செய்யும் அதிகாரம் வழங்கவும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிக்கு அதிக பட்சமாக 2 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை வழங்க வகை செய்யும்படி சட்டத்தை திருத்த வேண்டும் என்பதும் தேர்தல் கமிஷனின் கோரிக்கை ஆகும்.

சட்டம் தயாராகிறது

சட்டம் தயாராகிறது

இந்த தேர்தல் சட்டத்தை திருத்தும் நடவடிக்கையில் தற்போது மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம், தலைமை தேர்தல் கமிஷனுக்கு அனுப்பியுள்ள தகவலில், குற்றவியல் நடைமுறை சட்டத்திருத்தப் பணியை தொடங்கி உள்ளதாகவும், இது தொடர்பான வரைவு மசோதாவை தயாரிக்கும்படி சட்டத்துறைக்கு தகவல் அனுப்பி உள்ளதாகவும் அதில் கூறப்பட்டு உள்ளது.

பட்ஜெட் கூட்டத்தொடரில்..

பட்ஜெட் கூட்டத்தொடரில்..

புதிய சட்ட திருத்த மசோதா வருகிற நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய சட்ட திருத்தம் அமலுக்கு வந்தால், வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுப்பவர்களை புகார் இல்லாமல் தேர்தல் அதிகாரி நேரில் பிடித்து வழக்கு பதிவு செய்ய முடியும். புகாரை பெறும் போலீசார், ‘வாரண்ட்' இல்லாமல் குற்றவாளியை கைது செய்து, கோர்ட்டு அனுமதி இல்லாமல் விசாரணையை தொடங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

English summary
In its bid to check corruption in the poll process, the NDA government is contemplating to amend the law to make bribery both cash and kind during elections a cognisable offence, empowering police to arrest the violators without a warrant and jail up to two years.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X