For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜிஎஸ்டி நிறைவேற்றம்: பிரதமர் மகிழ்ச்சி - கேக் வெட்டி கொண்டாடிய அருண் ஜெட்லி

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: ராஜ்யசபாவில் ஜிஎஸ்டி மசோதா நிறைவேறியதை வரலாற்று சாதனை என்று பிரதமர் மோடி டிவிட்டரில் குறிப்பட்டு, மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அனைத்து கட்சியினருக்கும் பிரதமர் நரேந்திர மோடி நன்றி கூறியுள்ளார். இந்த வரலாற்று சாதனையை நாடாளுமன்ற அலுவகத்தில் நிதியமைச்சர் அருண் ஜெட்லி முன்னிலையில் பாஜகவினர் கேக் வெட்டி கொண்டாடினர்.

பொருளாதார சீர்திருத்தத்தை ஏற்படுத்துவதற்காக நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பை அமல்படுத்தும் வகையில், சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மசோதாவை முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசு கடந்த 2006ம் ஆண்டு தயாரித்தது. இது லோக்சபாவில் கடந்த 2011ம் ஆண்டு மார்ச் மாதம் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு அப்போதைய எதிர்கட்சியான பாஜக எதிர்ப்பு தெரிவித்து வந்தது. அதன்பின் தேர்தல் வந்ததால் இந்த மசோதா நிறைவேறவில்லை.

ஜிஎஸ்டி மசோதாவில் மாற்றம் கொண்டு வந்தால்தான் ஆதரவு தருவோம் என்று காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் தெரிவித்து இருந்தன.

இதையடுத்து, கடந்த வாரம், உற்பத்திக்கான ஒரு சதவீத கூடுதல் வரியை குறைத்துக் கொள்வது, மாநிலங்களின் நஷ்டத்தை முதல் 5 ஆண்டுகளுக்கு ஈடு கட்டுவது. இதைத் தொடர்ந்து 75 மற்றும் 50 சதவீதமாக நஷ்ட ஈட்டை குறைத்துக் கொள்வது உள்பட 6 திருத்தங்கள் ஜிஎஸ்டி அரசியல் சட்டத் திருத்த மசோதாவில் கொண்டு வரப்பட்டன.

இதையடுத்து இந்த மசோதாவுக்கு ஆதரவு அளிக்க காங்கிரஸ் முன் வந்தாலும், இன்னும் இந்த மசோதாவில் சில தவறுகள் இருக்கிறது, இவற்றை திருத்த வேண்டும் என்று இன்று முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் பேசினார். அதாவது, ஜிஎஸ்டி வரி 18 சதவீதமாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

நிறைவேறிய ஜிஎஸ்டி

நிறைவேறிய ஜிஎஸ்டி

இதையடுத்து தொடர்ந்து ஏற்பட்ட மாற்றங்கள், வாதங்கள், விவாதங்கள் நடைபெற்றன. தொடர்ந்து 7 மணி நேர வாதத்திற்குப்பின்னர் நேற்று ராஜ்யசபாவில் 203 வாக்குகள் ஆதரவுடன் சரக்குசேவைவரிக்கான அரசியல்சட்டதிருத்தமசோதா நிறைவேறியது.

பிரதமர் மகிழ்ச்சி

பிரதமர் மோடி இந்த மசோதா நிறைவேறியிருப்பதை வரலாற்று சாதனை என்று டிவிட்டரில் குறிப்பட்டு, மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அனைத்துக்கட்சியினருக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார். இதன் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி உயரும் என்றும் மோடி குறிப்பிட்டுள்ளார்.

அருண் ஜெட்லி கொண்டாட்டம்

அருண் ஜெட்லி கொண்டாட்டம்

இந்த வரலாற்று சாதனையை நாடாளுமன்ற அலுவகத்தில் நிதியமைச்சர் அருண் ஜெட்லி முன்னிலையில் பாஜகவினர் கேக் வெட்டி கொண்டாடினர். இந்த மசோதா நிறைவேறியது மூலம் நாடு முழுவதும் ஒரு வரி, ஒரு பொருளாதாரத்தின் கீழ் கொண்டு வரப்படுகிறது.

திமுக - ஆதரவு

திமுக - ஆதரவு

கடந்த 16ஆண்டுகளுக்கு முன்பு இந்த மசோதாவுக்கான முதல்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இந்த மசோதாவுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வந்த காங்கிரஸ் இந்த மசோதாவை ஆதரித்து வாக்களித்து இருந்தது. ஆனால், ஆதரவு அளிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட அதிமுக வாக்களிக்கவில்லை. வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்பு அவையில் இருந்து வெளிநடப்பு செய்தது.

என்ன மாற்றம் வரும்

என்ன மாற்றம் வரும்

ஏற்கனவே கடந்தாண்டு லோக்சபாவில் இந்த மசோதா நிறைவேறி இருந்தது. வரி விகிதங்கள், மாற்றங்கள் பற்றிய தகவல்கள் எதுவும் இன்று வெளியாகவில்லை. போகப் போகத்தான் தெரியும்.

விலை குறையும் பொருட்கள்

விலை குறையும் பொருட்கள்

இந்த மசோதா மூலம், டிவி, எல்இடி டிவி ஆகியவற்றின் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இறக்குமதி காரின் விலை குறையும். மொபைல் கால்களின் விலை அதிகமாகும். சினிமா டிக்கெட்டுகளின் விலை குறையும். இந்த ஜிஎஸ்டி நாட்டின் பொருளாதராத்தை 2 சதவீதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
GST bill Passed Rajyasabha Modi expressed Happy. Today is a historic day for the reason that Rajya Sabha has passed the GST bill which have been held up for a very long time. All members present at the time of voting, voted in favour of the bill," Jaitley told reporters.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X