For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குஜராத்தில் ஆரம்பமே அசத்தல்.. தபால் வாக்குகளில் பாஜக முன்னிலை.. ஆம் ஆத்மி. காங் நிலவரம் என்ன?

Google Oneindia Tamil News

காந்திநகர்: குஜராத் சட்டசபை தேர்தலில் தபால் வாக்குகளில் பாஜக முன்னணி இடத்தை பிடித்துள்ளது.

182 சட்டசபையை கொண்ட குஜராத் சட்டசபையின் பதவிக்காலம் டிசம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. இதையொட்டி, வரும் டிசம்பர் 1, 5 ஆகிய தேதிகளில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இதில் முதற்கட்டமாக 89 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் 63.14 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

Gujarat Assembly election 2022: BJP leads in Postal votes

இதையடுத்து இறுதி கட்ட வாக்கு பதிவு கடந்த 93 தொகுதிகளுக்கு டிசம்பர் 5ஆம் தேதி நடந்தது. இதில் 58.68 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. இரு கட்டங்களையும் சேர்த்து 66.31 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

Gujarat Assembly election 2022: BJP leads in Postal votes

இன்றைய தினம் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் முதற்கட்டமாத தபால் வாக்குகள் எண்ணப்படுகிறது. அதில் 182 தொகுதிகளில் எண்ணப்பட்ட நிலையில் பாஜக 141 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி 28 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது.

ஆம் ஆத்மி கட்சி 9 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. குஜராத்தை பொருத்தமட்டில் கருத்துக் கணிப்புகளில் பாஜகவே அதிக இடங்களில் வெல்லும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த கணிப்புகளை உண்மையாக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் வாக்குகளை ஆம் ஆத்மி பிரிப்பதாக ஒரு தோற்றம் உள்ளது. அந்த வகையில் பல இடங்களில் பாஜக வெர்சஸ் ஆம் ஆத்மி என்ற நிலையில் உள்ளது. அப்படியிருக்கும் போது தபால் ஓட்டுகளில் ஒரு வோட்டை கூட ஆம் ஆத்மி பெறவில்லை.

English summary
Gujart election 2022: BJP leads in postal votes.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X