For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குஜராத்தில் பாஜகவுக்கு மரண அடி- பெரும்பான்மைக்கே பெரும் போராட்டம்: ஏபிபி- சிஎஸ்டிஎஸ் கருத்து கணிப்பு

குஜராத் சட்டசபை தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களைப் பெறுவதற்கு பாஜக அல்லாடும் நிலைதான் எற்படுகிறது என்கிறது கருத்து கணிப்பு.

By Mathi
Google Oneindia Tamil News

Recommended Video

    குஜராத்தில் பாஜகவுக்கு மரண அடி- பெரும்பான்மைக்கே பெரும் போராட்டம்- வீடியோ

    காந்திநகர்: குஜராத் சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்குப் பெரும்பான்மை கிடைக்காது; அதிகபட்சமாக 91 முதல் 99 இடங்களைத்தான் அக்கட்சி கைப்பற்றும் என ஏ.பி.பி.-சி.எஸ்.டி.எஸ். கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சி 76 முதல் 88 இடங்களில் வெல்லும் என்றும் இக்கருத்து கணிப்பு தெரிவிக்கிறது.

    குஜராத் மாநிலத்தில் 22 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்து வருகிறது பாஜக. இம்மாநிலத்தின் 182 தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் 2 கட்டங்களாக நடைபெறுகிறது.

    இத்தேர்தல் தொடர்பாக ஏ.பி.பி செய்தி நிறுவனம் மற்றும் சி.எஸ்.டி.எஸ் இணைந்து கருத்து கணிப்பை நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளன. இதில் 22 ஆண்டுகாலம் குஜராத்தில் கோலோச்சிக் கொண்டிருக்கிற பாஜக இம்முறை மரண அடிதான் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    91-96 இடங்கள்தானாம்

    91-96 இடங்கள்தானாம்

    பாரதிய ஜனதா கட்சியானது அதிகபட்சமாக 91 முதல் 99 இடங்களைக் கைப்பற்றும் என்கிறது இக்கருத்து கணிப்பு. குஜராத்தில் ஆட்சி அமைக்க ஒரு கட்சிக்கு 93 எம்.எல்.ஏக்கள் தேவை. 22 ஆண்டுகாலமாக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்து வந்த பாஜக இம்முறை பெரும்பான்மைக்கே அல்லாடும் நிலை உருவாகிவிட்டது. தற்போது பாஜகவுக்கு 117 எம்.எல்.ஏக்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    பெரும்பான்மையை தொடும்?

    பெரும்பான்மையை தொடும்?

    காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரையில் குஜராத்தில் மிக அதிகபட்சமாக 60 இடங்களைத்தான் கைப்பற்றும் என்பது பொதுவான கருத்தாக இருந்தது. ஆனால் தற்போதைய ஏபிபி-சிஎஸ்டிஎஸ் கருத்து கணிப்பொ காங்கிரஸ் கட்சியானது 71 முதல் 86 இடங்களைக் கைப்பற்றி பாஜகவை தெறிக்கவிடும் என்கிறது. குஜராத் சட்டசபையில் காங்கிரஸுக்கு 59 தற்போது எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.

    இன்று படுசரிவு

    இன்று படுசரிவு

    கடந்த நவம்பர் மாதம் இதே ஏ.பி.பி- சி.எஸ்.டி.எஸ். நடத்திய கருத்து கணிப்பில், பாஜகவுக்கு 113 முதல் 121 இடங்கள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. காங்கிரஸ் கட்சி 58 முதல் 64 இடங்களைப் பெறும் எனவும் அக்கருத்து கணிப்பு தெரிவித்திருந்தது.

    பரிதாப மோடி

    பரிதாப மோடி

    குஜராத்தில் பாஜக எதிர்கொள்ளப் போகும் படுதோல்வியானது பிரதமர் நரேந்திர மோடிக்கு பெரும் பின்னடைவாகவே கருதப்படும். நாட்டின் பிரதமராக இருந்த போதும் குஜராத் தேர்தலுக்காக ரொம்பவே போராடினார் பிரதமர் மோடி. அவரது அரசியல் வரலாற்றில் வெற்று நாற்காலிகள் முன்னர் தேர்தல் பிரசாரம் செய்ய வேண்டிய பரிதாபம் ஏற்பட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

    English summary
    According to the ABP-CSDS survey, 91-99 seats for the BJP while Congress is expected to get 76-88 seats.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X