ராஜ்யசபா தேர்தல்: அகமது படேலை ஜெயிக்க வைக்க கூவத்தூர் பாணியை கையிலெடுத்த குஜராத் காங்.

Posted By:
Subscribe to Oneindia Tamil

அகமதாபாத்: ராஜ்யசபா தேர்தலில் சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகர் அகமது படேல் வெற்றி பெறுவதைத் தடுக்கும் வகையில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்து வருகின்றனர். இந்த நிலை தொடராமல் இருக்க 'கூவத்தூர்' பாணியில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஆங்காங்கே கிளப், பண்ணை வீடுகளில் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

குஜராத் மாநிலத்தில் ராஜ்யசபா தேர்தல் ஆகஸ்ட் 8-ந் தேதி நடைபெறுகிறது. பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி இருவரும் வெற்றி பெறுவது உறுதி. இவர்கள் வெற்றி போக பாஜகவுக்கு 28 எம்.எல்.ஏக்கள் எஞ்சியுள்ளனர்.

அகமது படேல்

அகமது படேல்

அதேநேரத்தில் 3-வது இடத்துக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அகமது படேல் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார். காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுடன் சேர்த்து மொத்தம் 60 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இம்மாநிலத்தில் ஒரு ராஜ்யசபா எம்.பி.க்கு 47 எம்.பிக்கள் தேவை.

அடுத்தடுத்து ராஜினாமா

அடுத்தடுத்து ராஜினாமா

இதனால் அகமதுபடேல் எளிதாக வெல்ல முடியும் என்பதுதான் தொடக்க நிலை. ஆனால் காங்கிரஸிலிருந்து விலகிய மூத்த தலைவர் வகேலா 11 எம்.எல்.ஏக்களை தம் பிடியில் வைத்து மிரட்டிக் கொண்டிருக்கிறார். அத்துடன் அடுத்தடுத்து காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ராஜினமா செய்தும் வருகின்றனர்.

ராஜ்யசபாவிலும்

ராஜ்யசபாவிலும்

இந்த நிலை நீடிப்பதால் காங்கிரஸ் பீதியடைந்துள்ளது. இவ்விவகாரம் இன்று ராஜ்யசபாவிலும் எழுப்பப்பட்டது. இதுவரை 5 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்துவிட்டனர். இவர்களில் சிலர் பாஜகவில் இணைந்தும்விட்டனர்.

கூவத்தூர் ஸ்டைல்

கூவத்தூர் ஸ்டைல்

இதனால் எஞ்சிய எம்.எல்.ஏக்களை தக்க வைக்க காங்கிரஸ் கட்சி பகீரத பிரயத்தனம் செய்து வருகிறது. ஆங்காங்கே காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை கொத்து கொத்தாக கிளப்புகள், பண்ணை வீடுகளில் அடைத்து வைத்து அதாவது சசிகலாவின் கூவத்தூர் ரிசார்ட் பாணியில் பாதுகாத்து வருகிறது காங்கிரஸ்.

Mahila Cong members clash at Sathyamurthy Bhavan | Oneindia Tamil
தப்பி ஓடும் எம்.எல்.ஏக்கள்

தப்பி ஓடும் எம்.எல்.ஏக்கள்

ராஜ்க்கோட் காங்கிரஸ் எம்.எல்.ஏ. இந்த்ரானி ராஜ்யாகுரு தமது வீட்டிலும் கிளப்பிலும் 8 எம்.எல்.ஏக்களை தங்க வைத்துள்ளார். இவர்களில் ஒரு எம்.எல்.ஏ. திடீரென தப்பி ஓடிவிட்டார். வதோதராவில் 20 எம்.எல்.ஏக்கள் ஒரு பண்ணை வீட்டில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Gujarat Congress Party attempted to prevent its MLAs from leaving the Party and started keeping its MLAs at secured places as Kuvathur Resort Style.
Please Wait while comments are loading...