For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சரமாரி கேள்வியெழுப்பிய பொதுமக்கள்.. பாதியிலேயே கழன்ற பாஜக வேட்பாளர்!

Google Oneindia Tamil News

காந்திநகர்: குஜராத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பாஜக வேட்பாளரிடம் பொதுமக்கள் சரமாரியாக கேள்விகளை எழுப்பியிருந்தது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து பாஜக வேட்பாளர் அந்த கூட்டத்தைவிட்டு அவசர அவசரமாக வெளியேறி சென்றுள்ளார். தற்போது இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

கடந்த தேர்தலில் பாஜகதான் வெற்றி பெற்றிருந்தாலும், காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் இடையே வெறும் 10% வாக்குகள்தான் வித்தியாசம் இருந்தது. இந்நிலையில் இந்த தேர்தலில் பாஜக தனது வாக்கு வங்கியை அதிகரிக்க முயன்று வரும் நிலையில் அக்கட்சியின் வேட்பாளர்கள் இவ்வாறு புறக்கணிக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது.

மாட்டிக்கொண்ட முதல்வர் ஸ்டாலின்.. நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி பற்றி டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி மாட்டிக்கொண்ட முதல்வர் ஸ்டாலின்.. நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி பற்றி டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி

பாஜக வேட்பாளருக்கு சரமாரி கேள்வி

பாஜக வேட்பாளருக்கு சரமாரி கேள்வி

குஜராத் மாநிலத்தின் அம்ரேலி மாவட்டத்தில் உள்ள 'தாரி' சட்டமன்ற தொகுதியில் பாஜக சார்பில் 'ஜேவி ககாடியா' போட்டியிடுகிறார். இந்நிலையில் இன்று பிற்பகல் தனது தொகுதியில் உள்ள ககாடாடி கிராமத்தில் பிரசாரம் செய்து கொண்டிருந்தார். இந்த பிரசாரக் கூட்டத்தில் இருந்த சில இளைஞர்கள் திடீரென எழுந்து ஜேவி ககாடியா நோக்கி சரமாரியாக கேள்விகளை எழுப்ப தொடங்கினர். விலைவாசி உயர்வு, உர தட்டுப்பாடு, சாலை வசதி உள்ளிட்ட பிரச்னைகளை அவர்கள் எழுப்பினர். ஆனால் இதற்கு பதிலளிக்காமல் பிரதமர் மோடி குறித்து ஜேவி ககாடியா பேசிக்கொண்டிருந்தார்.

 திரும்ப திரும்ப

திரும்ப திரும்ப

இதனால் கடுப்பான இளைஞர்கள், தேர்தல் குறித்து பேசாமல் ஏன் பிரதமர் குறித்து பேசுகிறீர்கள் என்று கேள்வியெழுப்பியுள்ளனர். அப்போதும் ககாடியா விடாமல் பிரதமர் குறித்து மட்டும் பேசிக்கொண்டிருந்ததையடுத்து இளைஞர்கள் மேலும் சத்தம்போட தொடங்கினர். நிலைமை சாதகமாக இல்லாததையடுத்து உள்ளூர் பாஜக தலைவர்கள் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தியுள்ளனர். தற்போது இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஜேவி ககாடியா அடிப்படையில் காங்கிரஸ் எம்எல்ஏ ஆவார். இவர் கடந்த 2017ம் ஆண்டு காங்கிரஸ் சார்பில் இந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். பின்னர் 2020ல் பாஜகவுக்கு தாவி தற்போதும் மீண்டும் தேர்தலில் நின்றிருக்கிறார்.

முதல்முறையல்ல

முதல்முறையல்ல

இதுபோல பாஜக வேட்பாளர்கள் மீது குற்றம்சாட்டப்படுவது இது முதல்முறை அல்ல. ஏற்கெனவே இது போன்று இரண்டு மூன்று சம்பவங்கள் நடந்திருக்கின்றன. முதல் சம்பவம் துவாரகாவில் உள்ள கோகல்பர் கிராமத்தில் நடந்தது. துவாரகா தொகுதியின் பாஜக வேட்பாளரான 'பபுபா மானெக்' பிரசார கூட்டத்தில் பங்கேற்றிருந்தபோது பொதுமக்கள் சிலர் இவரை நோக்கி தாறுமாறாக கேள்விகளை எழுப்பினர். வேறு வழியின்றி பபுபா மானெக் கூட்டத்தை பாதியிலேயே கைவிட்டுவிட்டு சென்றுவிட்டார். மற்றொரு சம்பவம், கேத்பிரம்மா தொகுதியில் நடந்துள்ளது. இந்த தொகுதியின் பாஜக வேட்பாளராக 'அஸ்வின் கோட்வால்' களம் இறக்கப்பட்டுள்ளார்.

காங்கிரசும்

காங்கிரசும்

இவர் கேத்பிரம்மாவின் கிராமம் ஒன்றில் பிரசாரம் செய்துகொண்டிருந்தபோதுஇதேபோல கேள்விகளை எதிர்கொண்டார். பின்னர் அங்கிருந்து பாதியிலேயே நடையைகட்டிவிட்டார். கடந்த 2007ம் ஆண்டிலிருந்து காங்கிரஸ் சார்பில்போட்டியிட்டு வெற்றி பெற்று வந்த இவர், இந்த முறை பாஜக சார்பில்களமிறங்கியுள்ளார். கேத்பிரம்மா தொகுதி 1995ம் ஆண்டிலிருந்து காங்கிரஸ்வசம் இருந்து வருகிறது. இப்படி பிரசாரத்தின் போது பாதியிலேயேவிரட்டப்பட்டவர்கள் லிஸ்ட்டில் பாஜக பெயர் மட்டுமல்லாது காங்கிரஸ் கட்சிவேட்பாளர் ஒருவரின் பெயரும் அடிபட்டுள்ளது. அதாவது, வாவ் சட்டமன்றதொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் இதேபோல பிரசாரம் செய்யும் போது சிலர்கேள்வியெழுப்பியதால் பிரசாரத்தை பாதியிலேயே நிறுத்திவிட்டு சென்றுவிட்டார்என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Gujarat Election Campaign: BJP Dhari Candidate JV Kakadia, who was campaigning in Gujarat, was Flooded with questions from the public. After this incident, the BJP candidate immediately left that place and Currently that particular videos are spreading viral on social media.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X