For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குவஹாத்தியில் முஸ்லீம் கலைஞரின் கை வண்ணத்தில் 101 அடி மூங்கில் துர்கா சிலை... கின்னஸ் சாதனை

குவஹாத்தி முஸ்லீம் கலைஞர் ஒருவரினால் வடிவமைக்கப்பட்டுள்ள 101 அடி உயரமான மூங்கில் சிலை, உலகின் மிக உயரமான மூங்கில் சிற்பமாக கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற உள்ளது.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

கவுகாத்தி: நவராத்திரி பண்டிகைக்காக அசாம் மாநிலம் குவஹாத்தியில் 101 அடி உயரத்திற்கு துர்கா சிலை அமைக்கப்பட்டு வருகிறது. முற்றிலும் மூங்கிலை கொண்டு சிலையை அமைக்கும் பணியில் நூர்தீன் அஹ்மத் தலைமையினாலான கலைஞர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இது உலகின் மிக உயரமான மூங்கில் சிற்பமாகும். 101 அடி உயரமான மூங்கில் சிலை, உலகின் மிக உயரமான மூங்கில் சிற்பமாக கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற உள்ளது.

Guwahati: 101 ft Durga idol to enter Guinness book of records

உலகின் மிக உயரமான மூங்கில் கட்டமைப்பாக இது அறிவிக்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று நூர்தீன் அஹ்மத் தலைமையினாலான கலைஞர் கூறியுள்ளார்.

குவஹாத்தியில் ஆண்டுதோறும் துர்கா பூஜை விழா கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு அங்கு மிகப்பெரிய துர்கா சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

Guwahati: 101 ft Durga idol to enter Guinness book of records

இது உலகின் மிக உயரமான மூங்கில் சிற்பமாகும். சிலை தயாரிப்பதில் 5,000 மூங்கில் குச்சிகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. 20 மீட்டர் அகலமும் 63 அடி நீளமும் கொண்ட மேடையில் சுமார் ரூ.12 லட்சம் வரை செலவில் இந்த சிலை அமைக்கப்பட்டிருக்கிறது.

83 அடி உயர ஃபைபர் மற்றும் ஒரு இரும்பு கட்டமைப்பை மேடையில் இணைத்து, 101 அடி உயரத்தில் சிலை அமைக்கப்பட்டிருக்கிறது. நூருதீன் அஹ்மத், 40 கலைஞர்களின் உதவியுடன் ஆகஸ்ட் 1ஆம் தேதி துர்கா சிலை கட்டமைப்பு பணியை தொடங்கினார்.

கடந்த 42 ஆண்டுகளுக்கு மேலாக 200 துர்கா பூஜா சிலைகளை அஹமத் வடிவமைத்துள்ளார். இதுகுறித்து பேசிய நூர்தீன் அஹ்மத், கின்னஸ் புத்தகத்தில் உலக சாதனை பதிவை ஏற்கனவே பதிவு செய்துள்ளோம் என்று கூறியுள்ளார்.

உலகின் மிக உயரமான மூங்கில் கட்டமைப்பாக இது அறிவிக்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு கலைஞருக்கு மதம் கிடையாது, அவருடைய ஒரே மதம் மற்றும் கடமை மனித குலத்திற்கு சேவை செய்வது என்றும் நான் எல்லா மதங்களையும் நேசிக்கிறேன் என்றும் அஹ்மத் கூறியுள்ளார்.

நான் முஸ்லீமாக இருப்பதால் ஏன் இப்படிப்பட்ட சிலைகளை செய்கிறேன் என்று பலர் என்னிடம் கேட்கிறார்கள், ஆனால் நான் 1975-ல் இருந்து இந்த வேலையை செய்து வருகிறேன் என்றும் அஹ்மத் தெரிவித்துள்ளார்.

English summary
Muslim artist along with his team, is designing a 101-feet tall idol of Goddess Durga, carved out of bamboo sticks Guwahati. Claiming it to be the world's tallest bamboo sculpture, Bishnupur Durga Puja Committee has registered it in the "Guinness Book World Records".
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X