வாட்ஸ்அப் முடங்கிய நேரத்தில் ஹேக்கர்கள் கைவரிசை.. போனிலுள்ள விவரங்களை அபேஸ் செய்தது அம்பலம்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  ஒரு மணி நேரமாக முடங்கிய வாட்ஸ்அப்.. பதைத்து போன நெட்டிசன்கள்!- வீடியோ

  டெல்லி: பிரபலமான அப்ளிகேஷனான வாட்ஸ்அப் தற்போது உலகின் பெரும்பாலான பகுதிகளில் திடிரென்று வேலை செய்யாமல் செயல் இழந்து போனது. இந்தியா மற்றும் சில நாடுகளில் வாட்சப் திடீரென்று வேலை செய்யாமல் நின்று போனது .

  பலரும் இது குறித்து பேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் விவாதித்து வருகின்றனர். இந்த சம்பவம் தற்போது வைரல் ஆகியிருக்கிறது.மேலும் சரியாக ஒரு மணி நேரத்திற்கு பின் தற்போது மீண்டும் வேலை செய்ய தொடங்கி இருக்கிறது.

  இந்த நிலையில் அந்த ஒரு மணிநேரத்தை ஹேக்கர்கள் தங்களுக்கு சாதகமாக பயணப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். அதன்படி மிகவும் நூதனமாக பலரது வாட்சப் தகவல்களை கொள்ளை அடித்து இருக்கின்றனர்.

   நின்று போன வாட்சப்

  நின்று போன வாட்சப்

  நேற்று மதியம் உலகின் பெரும்பாலான பகுதிகளில் திடீரென்று வாட்ஸ்அப் அப்ளிகேஷன் வேலை செய்யாமல் நின்று போனது. அதன்படி நாம் அனுப்பும் மெசஜ்கள் யாருக்கும் செல்லாமல், பிறர் அனுப்பும் மெசஜ்கள் நமக்கு வராமல் இருந்திருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் சிலருக்கு வாட்சப் ஓபன் செய்ததும் 'கனெக்டிங்' என்ற வார்த்தை மட்டும் வந்து இருக்கிறது. அதன்படி இந்தியா, சிங்கப்பூர் , ஐரோப்பா, வியட்நாம், ஈராக் ஆகிய நாடுகளில் வாட்சப் செயல் இழந்து இருக்கிறது.

  ட்ரெண்ட் ஆனா விஷயம்

  இதையடுத்து குழம்பிப் போன வாட்ஸ்அப் பயனாளர்கள் உடனடியாக பேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் இது குறித்து விவாதம் செய்ய தொடங்கினார். அதில் உலகம் முழுக்க நிறைய பேருக்கு இந்த பிரச்சனை வந்தது தெரியவந்துள்ளது. மேலும் அமெரிக்காவின் பெரும்பாலான பகுதிகளிலும் வாட்சப் வேலை செய்யவில்லை. வாட்சப் செயல் இழந்த விஷயத்தை சிலர் டிவிட்டர் பார்த்துதான் தெரிந்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

   ஒரு மணி நேரத்தில் சரியானது

  ஒரு மணி நேரத்தில் சரியானது

  சரியாக அனைத்து பகுதிகளிலும் ஒரு மணி நேரத்திற்கு பின் வாட்சப் மீண்டும் சரியாக வேலை செய்ய ஆரம்பித்தது. இதற்கு புதிய காரணம் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி வாட்ஸ்அப் சில நாட்களாக நிறைய அப்டேட்களை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. அதேபோல் மிகப்பெரிய அப்டேட் ஒன்றை வாட்சப் நிறுவனம் வெளியிட இருக்கிறதாம். மேலும் அதில் நிறைய வித்தியாசமான வசதிகளை ஏற்படுத்த இருக்கிறதாம். அதை சோதனை செய்யும் போது தவறுதலாக இப்படி நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

   புதிய அப்டேட் என்ன

  புதிய அப்டேட் என்ன

  இதன்படி வாட்ஸ்அப் வெளியாக இருக்கும் புதிய அப்டேட் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. அதில் இனி பேஸ்புக் போலவே வாட்சப்பில் லைவ் வீடியோ ஷேரிங் செய்ய முடியும் எனவும், வாட்சப் மூலமாக வங்கிகளுக்கு பணம் அனுப்ப முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் குரூப் வீடியோ கால் வசதியும் வர இருக்கிறது. மேலும் கூகுள் அலோ, ஆப்பிள் சிரி போன்ற தொழில்நுட்பம் குறித்தும், அது போன்று வாட்சப்பில் ஏற்படுத்தவும் ஆராய்ந்து வருகிறது. இதன் காரணமாகவே வாட்சப் செயல் இழந்து இருக்கிறது.

   உலகம் முழுக்க ஹேக்கர்கள் கைவரிசை

  உலகம் முழுக்க ஹேக்கர்கள் கைவரிசை

  நேற்று சில ஹேக்கர்கள் இந்த சந்தர்ப்பத்தை தங்களுக்கு வசதியாக பயன்படுத்தியது தெரியவந்து இருக்கிறது. அதன்முலம் வாட்ஸ்அப் பெயரில் "வாட்சப் ஐஎன்சி'' என வாட்சப் போலவே ஒரு அப்ளிகேஷனை உருவாக்கி பிளே ஸ்டோரில் வைத்து இருக்கிறார்கள். நேற்று வாட்சப் வேலை செய்யாததால் பலர் அதை டெலிட் செய்துவிட்டு மீண்டு இன்ஸ்டால் செய்யும் போது தவறுதலாக இந்த அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்து இருக்கிறார்கள்.

   எல்லாம் போச்சு

  எல்லாம் போச்சு

  இதன் காரணமாக லட்சக்கணக்கில் பலருடைய தகவல்கள் அந்த ஹேக்கர் குழுவிடம் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அவர்கள் தங்களது மொபைல் எண்ணை எங்கெல்லாம் கொடுத்து வைத்து இருக்கிறார்களோ அதுகுறித்த தகவலும் தற்போது அவர்கள் கைக்கு சென்று இருக்கிறது. இந்த அப்ளிகேஷனை டவுன்லோட் செய்ய வேண்டாம் என வாட்சப் நிறுவனம் கோரிக்கை விடுத்து இருக்கிறது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  WhatsApp application has went down today in many countries like India and Singapore. Whatsapp gave explanation to this problem. While this problem were going on hackers took many details using a fake WhatsApp application.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற