2 ஆண்டுகளுக்கு பிறகு பொதுவெளியில் தூக்கு. . ஈரானில் பரபரப்பு. . மக்கள் என்ன சொல்கிறார்கள்?
தெஹ்ரான்: ஈரான் நாட்டில் 2 ஆண்டுகளுக்கு பிறகு பொது வெளியில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது அங்குள்ள மக்கள் மத்தியில் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்று ஈரான். கடந்த 1979-ம் ஆண்டு ஈரானில் இஸ்லாமிய புரட்சி ஏற்பட்டு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் பிறகு ஈரான் இஸ்லாமிய குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டது.
தற்போது ஈரானில் அதிபராக இருக்கும் இப்ராஹிம் ரெய்சி பழமைவாத கொள்கைகளில் தீவிர பற்றுடையவர். இதனால், அங்கு இஸ்லாமிய சட்டங்களின் கொள்கைகளை தீவிரமாக பின்பற்ற வேண்டும் என்று தீவிர பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பொதுவெளியில் தூக்கு
அதேபோல், குற்றவாளிகளுக்கு எதிராகவும் கடுமையான தண்டனை நிறைவேற்றும் முறை சமீப காலமாக அதிகரிப்பதாக ஈரானில் உள்ள சமூக ஆர்வலர்கள் மத்தியில் கவலை எழுந்துள்ளது. இந்த நிலையில், ஈரானில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பொது வெளியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு இருப்பது கடும் விமர்சனங்களை கிளப்பியுள்ளது. ஈரானின் தெற்கு நகரமான ஷிராஸ் நகரில் கடந்த பிப்ரவரி மாதம் போலீஸ் அதிகாரியை கொலை செய்த வழக்கில் கைதான இமான் சப்சிகர் என்பவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபணம் செய்யப்பட்டு அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு
பொதுவெளியில் அவரை தூக்கிட்டு மரண தண்டனையை நிறைவேற்ற ஈரான் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இதன்படி, மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி பொது இடத்திற்கு அழைத்து வரப்பட்டார். அங்கிருந்த டிரக்கில் நிறுத்தப்பட்ட கிரேன் மீது கட்டிவைக்கப்பட்டு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. சமீப காலமாக ஈரானில் இதுபோன்ற மரண தண்டனைகள் சிறைவளாகத்திலேயே நிறைவேற்றப்பட்டு வந்த நிலையில், தற்போது 2 ஆண்டுகள் கழித்து பொதுவெளியில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது அங்குள்ள சமூக ஆர்வலர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியில் எதிர்ப்புகளை சம்பாதித்துள்ளது.

2 ஆண்டு 2 ஆண்டுகளுக்குப் பிறகு. . களுக்குப் பிறகு. .
ஈரானில் செயல்பட்டு வரும் நார்வேயை சேர்ந்த தொண்டு நிறுவனம், பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றியதை கடுமையாக சாடியுள்ளது. கொடூர தண்டனையை பொதுவெளியில் நிறைவேற்றுவதன் மூலம், போராட்டங்களில் ஈடுபடுவர்களையும், எதிர்ப்பாளர்களையும் அச்சுறுத்தும் வகையில் ஈரானின் செயல்பாடு உள்ளது. மிகவும் பிற்போக்குத் தனமான இந்த இடைக்கால (1100-க்கும் 1500- ஆண்டு கால கட்டம்) நடைமுறையை மரண தண்டனைக்கு எதிரான போராட்டங்கள் மூலம் குறைக்க முடியும்" என்று மனித உரிமை அமைப்பின் இயக்குநர் மஹ்மூத் அமிரி-மொகதாம் தெரிவித்துள்ளார். ஈரானில் கடந்த 2020-ம் ஆண்டு ஜுன் 11-ந் தேதி கடைசியாக பொது வெளியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு இருந்தது. அதன்பிறகு 2 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் பொதுவெளியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஈரான் மக்கள் அதிர்ச்சி
மரண தண்டனை நிறைவேற்றப்படுவது தொடர்பான பதிவுகள் சமூக வலைத்தளங்களில் பரவி ஈரான் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் ஈரானில், சமீப காலமாக அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்கள் மீது அடக்குமுறைகள் கட்டவிழ்த்துவிடப்படுவதகாவும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது. ஈரானின் திரைத்துறையை சேர்ந்த முன்னணி இயக்குநர்கள், அறிவார்ந்த சமூகத்தினர் பலரும் கைது செய்யப்பட்டு உள்ளனர். கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில், நடப்பு ஆண்டின் முதல் கலாண்டில், நிறைவேற்றப்பட்டுள்ள மரண தண்டனைகளின் எண்ணிக்கை இரு மடங்கு ஆகியுள்ளதாகவும் மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியில் கவலை எழுந்துள்ளது.
-
கண் கொத்தி பாம்பாக காத்திருக்கும் CIA & மொசாட்.. கொஞ்சம் அசந்தாலும் ஈரான் மொத்தமாக சிதஞ்சிடும் -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை! -
ஈரான் சரியான புத்திசாலித்தனம்.. அமெரிக்கா போரை வைத்தே.. கோடி கோடியாக கூடுதலாக சம்பாதிக்கும் வித்தை -
இஸ்ரேலை கதறவிட்ட ஈரான்.. அணு சக்தி மையத்தை குறிவைத்து கடும் ‘அட்டாக்’.. பதிலுக்கு பதிலால் பதற்றம் -
"இன்னும் 48 மணி நேரம் தான் டைம்.." ஈரானுக்கு இறுதி எச்சரிக்கை கொடுத்த டிரம்ப்! அடுத்து பேரழிவு தான்? -
இருளில் மூழ்கும் ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியால் 48 மணிநேர கெடுவுடன் டிரம்ப் மிரட்டல்! ஷாக் அறிவிப்பு -
"ஜாம்பி" கப்பல்.. ஹார்முஸை கடந்து சென்ற மர்மம்.. நடுவில் சம்பந்தமே இல்லாமல் சிக்கும் இந்தியா? -
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
எல்லா பிரச்சினைக்கும் டிரம்ப் தான் காரணம்.. சரியா திட்டமிடல.. சிஐஏவின் ex தலைவர் காட்டம் -
"ஈரானுக்கு ஆதரவு".. ஷியா இஸ்லாமியர்களை விரட்டியடிக்கும் பாகிஸ்தான்? ராணுவ தளபதியால் சர்ச்சை -
ரம்ஜான் நாளில் களத்தில் இறங்கிய பிரதமர் மோடி.. மேற்காசியாவில் திரும்பும் அமைதி! உற்றுநோக்கும் உலகம்! -
ஈரானும் ஊரானும் வாழட்டும்! நீங்க எந்த கட்சி அமெரிக்காவா? ஈரானா? தனது ஸ்டைலில் கமல் சொன்ன வார்த்தை!












Click it and Unblock the Notifications