இனி குட் மார்னிங் எதற்கு? எல்லோரும் 'ஜெய் ஹிந்த்' சொல்லுங்க! ஹரியானா பள்ளி கல்வித்துறை உத்தரவு
சண்டிகர்: இனி காலை வணக்கத்திற்கு பதில், மாணவர்கள் அனைவரும் 'ஜெய் ஹிந்த்' என சொல்ல வேண்டும் என்று ஹரியானா மாநில பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
சுதந்திர தினம் இம்மாதம் 15ம் தேதி கொண்டாடப்பட இருக்கையில், ஹரியானா மாநிலத்தை சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கு முக்கிய உத்தரவு பறந்திருக்கிறது. வழக்கமாக பள்ளிகளில் குட் மார்னிங் என காலை வணக்கம் சொல்வது இயல்பு. ஆசிரியர்கள் வகுப்பறைக்குள் நுழையும் போது மாணவர்கள் கோரசாக வணக்கத்தை சொல்லும்போது, ஆசிரியருக்கு புதிய உற்சாகம் பிறக்கும். இப்படி இருக்கையில், இனி வரும் நாட்களில் இந்த குட் மார்னிங்குக்கு பதில் ஜெய்ஹிந்த் என சொல்ல வேண்டும் என்று ஹரியானா பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

பள்ளி மாணவர்களிடையே தேசபக்தி மற்றும் தாய் நாடு குறித்த பெருமிதத்தை ஏற்படுத்தும் வகையில் இம்முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அம்மாநில பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. அம்மாநில கல்வி அமைச்சர் சீமா த்ரிகா, "ஜெய் ஹிந்த் எனும் சொல்லை வாழ்த்துச் சொல்லாக ஏற்றுக்கொள்வதன் மூலம், நமது மாணவர்கள் எல்லைக காக்கும் வீரர்களை நினைவுகூர வேண்டும் என்று விரும்புகிறோம். ராணுவ வீரர்களை கவுரவிப்பதன் மூலம், மாணவர்கள் இயல்பாகவே ஒழுக்கமானவர்களாக மாறுவார்கள். 'ஜெய் ஹிந்த்' எனும் முழக்கம் தேசபக்தியின் தீப்பிழம்புகளைத் தூண்டும்.
நாம் நமது கண்ணோட்டத்தை மாற்ற வேண்டும். தேசத்தைக் கட்டியெழுப்புவதில் மாணவர்களின் எதிர்காலப் பங்கைக் கருத்தில் கொண்டு, மாணவர்களை வடிவமைக்க வேண்டும். குறைந்தபட்சம் அனைத்து அரசு ஊழியர்களும் ஹாய், ஹலோ, குட் மார்னிங் என சொல்வதற்கு பதிலாக 'ஜெய் ஹிந்த்' என்று சொல்லத் தொடங்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
பள்ளி கல்வித்துறை இது குறித்து விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில், "மாணவர்களிடையே தேசிய அடையாளத்தின் வலுவான உணர்வை வளர்ப்பதற்கும், தேசிய ஒற்றுமை, தேசபக்தி மற்றும் இந்தியாவின் வளமான பாரம்பரியத்தை மதிக்க கற்று கொடுப்பதற்கும் 'ஜெய்ஹிந்த்' முழக்கம் உதவியாக இருக்கும். இந்த முயற்சி, தேசபக்தியையும், தேசத்தின் சுதந்திரத்திற்காகப் போராடியவர்களின் தியாகங்களைப் பற்றி அறிந்துகொள்ளவும் மாணவர்களை ஊக்குவிக்கும்.
பல்வேறு பின்னணிகளைச் சேர்ந்த மாணவர்களிடையே ஒற்றுமையை வளர்ப்பதிலும், ஒழுக்கத்தை ஊக்குவிப்பதிலும், கலாச்சார பாரம்பரியத்திற்கான மரியாதையை ஊக்குவிப்பதிலும் இந்த முழக்கம் நிச்சயம் நேர்மறையான பலனை கொடுக்கும். தேசத்தின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பிற்கான ஆயுதப்படை வீரர்களின் அர்ப்பணிப்பைக் குறிக்கும் வகையில், ஜெய்ஹிந்த் முழக்கம் ஏற்கனவே ஆயுதப்படைகளால் பயன்படுத்தப்பட்டு வருகிறது" என்று கூறப்பட்டிருக்கிறது.
ஆக.15ம் தேதிக்குள் இந்த உத்தரவை அனைத்து பள்ளிகளுக்கும் அமல்படுத்த வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications