பிரசவத்திற்குப் பிறகு ஐசியுவுக்கு மாற்றப்பட்ட போலீஸ்காரரின் மனைவி பலாத்காரம்!
சன்டிகர்: ஹரியானாவில் குழந்தையை பிரசவித்த பிறகு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த போலீஸ்காரரின் மனைவி மர்ம நபரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
ஹரியானா மாநிலம் காஜ்ஜார் மாவட்டத்தில் உள்ள பகதூர்காரில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் போலீஸ்காரர் ஒருவரின் மனைவி பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். கடந்த வெள்ளிக்கிழமை இரவு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.

குழந்தை பிறந்த பிறகு அவரின் நிலைமை மோசமானது. இதையடுத்து அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். சனிக்கிழமை இரவு 3.30 மணிக்கு ஒருவர் வெர்னா காரில் மருத்துவமனைக்கு வந்தார்.
காரில் இருந்து இறங்கிய அவர் நேராக தீவிர சிகிச்சை பிரிவுக்கு சென்றார். அங்கு இருந்த போலீஸ்காரரின் மனைவியை அவர் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு கிளம்பிச் சென்றுவிட்டார். அந்த நபரின் உருவம் மருத்துவமனையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த மர்ம நபரை தேடி வருகிறார்கள். மருத்துவமனையின் அலட்சியத்தால் தான் பலாத்கார சம்பவம் நடந்துள்ளது என்று அப்பெண்ணின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அந்த மர்ம நபர் வந்து பலாத்காரம் செய்துவிட்டு செல்லும் வரை தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவமனை ஊழியர்கள் ஒருவர் கூட இல்லை என்று அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications