For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கிராம மக்களுக்கு தடுப்பூசி.. ஆற்றை கடந்து செல்லும் சுகாதார பணியாளர்கள்.. நெகிழ வைக்கும் வீடியோ..!

சுகாதார பணியாளர்கள் ஆற்றை கடந்து செல்லும் வீடியோ வைரலாகிறது

Google Oneindia Tamil News

ஸ்ரீநகர்: தொலைதூர கிராமங்களில் உள்ள மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக, ஆற்றை கடந்து சென்று சுகாதார பணியாளர்கள் ரிஸ்க் எடுத்து வருகின்றனர்.

நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வருகிறது... அனைவருக்குமே தடுப்பூசியை செலுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டினை மத்திய அரசு எடுத்துள்ளதால், அதற்கான முன்னெடுப்புகளில் இறங்கி வருகிறது.

Healthcare team cross river to conduct vaccination in Jammu and Kashmir

இந்நிலையில், ஒரு வீடியோ வெளியாகி உள்ளது.. அது ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் எடுக்கப்பட்ட வீடியோ.. சில சுகாதாரப் பணியாளர்கள், ஒரு ஆற்றை கடந்து செல்கின்றனர்.. முழங்கால் அளவு தண்ணீர் ஓடும் அந்த ஆற்றை அவர்கள் மிகுந்த சிரமத்துடன் கடந்து செல்கிறர்கள்.

ஜம்மு காஷ்மீரின் தொலைதூரத்தில் இருக்கும் அந்த கிராமம் பெயர் ராஜோரி.. இந்த கிராம மக்களுக்கு தடுப்பூசி பெறுவதை உறுதிபடுத்த, சுகாதாரப் பணியாளர்கள், இப்படி ஒரு ரிஸ்க்கை எடுத்துள்ளனர்.. அந்த கிராமத்துக்கு நடுவில் இந்த ஆறு உள்ளது.. தங்கள் ஆபத்தையும் பொருட்படுத்தாமல் பணியில் முழு வீச்சுடன் ஈடுபட்டு வருவதை பார்த்து பொதுமக்களே ஆச்சரியப்பட்டனர்.

தடுப்பூசி.. பாஜக மாநிலம், பாஜக அல்லாத மாநிலம்.. பாகுபாடு காட்டும் மத்திய அரசு.. காங். புகார் தடுப்பூசி.. பாஜக மாநிலம், பாஜக அல்லாத மாநிலம்.. பாகுபாடு காட்டும் மத்திய அரசு.. காங். புகார்

சுகாதார மையத்தின் பொறுப்பாளர் டாக்டர் இர்ரம் யாஸ்மின் என்பவர் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.. இதுகுறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் அவர் சொல்லும்போது, "ஒவ்வொரு வீடாக சென்று அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று உயர் அதிகாரிகள் எங்களுக்கு உத்தரவிட்டுள்ளனர்.. ஆனால், இது மிகவும் கஷ்டமான பணி.. எனினும், எங்கள் சுகாதார ஊழியர்கள் ஆறுகள், மலைகள் இப்படி பல தடைகளை தாண்டி, கடமைகளை செய்து வருகின்றனர்" என்றார்.

English summary
Healthcare team cross river to conduct vaccination in Jammu and Kashmir
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X