இமாசல பிரதேசம் பாஜகவுக்கு தான்.. ஆனாலும் காங்கிரசும் மோசம் இல்லை.. டைம்ஸ் நவ் -இடிஜி எக்சிட் போல்
சிம்லா: இமாச்சல பிரதேசத்தில் பாஜக வெற்றி பெறும் என்றும், அந்த கட்சி 34-42 இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக டைம்ஸ் நவ்- இடிஜி வெளியிட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.
இயற்கை எழில் கொஞ்சும் அழகை கொண்ட மாநிலம் இமாசல பிரதேசம். இமாசல பிரதேசம் என்றாலே ஷிம்லாவும் அங்குள்ள குளுமையான சூழலுமே பலருக்கும் நினைவு வரும். குளுமையான தட்பவெப்ப நிலை கொண்ட இமாசல பிரதேசத்த்தில் தற்போது தேர்தலால் அனல் பறக்கிறது.
மொத்தம் 68 தொகுதிகளை கொண்ட இமாசல பிரதேசத்தில் தற்போது பாஜக ஆட்சியில் உள்ளது.

இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தல்
ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் தீவிரம் காட்டி வரும் பாஜக தேர்தல் வேலைகளில் படு சுற்று சுறுப்பாக ஈடுபட்டது. அதேநேரத்தில் பறிகொடுத்த ஆட்சியை மீண்டும் கைப்பற்றிவிட வேண்டும் என்பதில் காங்கிரஸ் கட்சி ஆர்வம் காட்டி வந்தது. ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ் கட்சிகளும் இமாசல பிரதேச சட்டமன்ற தேர்தலில் போடியிட்டன. தேர்தலில் 65.92 சதவீத வாக்குகள் பதிவானது. ஆம் ஆத்மி கட்சி தங்கள் இமாசல பிரதேசத்தில் தடம் பதிக்கலாம் என்ற உற்சாகத்துடன் இருந்தது.

எந்த கட்சிக்கு வெற்றி வாய்ப்பு
இந்த பரபரப்புக்கு மத்தியில் கடந்த மாதம் 12 ஆம் தேதியே வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தாலும் வாக்கு எண்ணிக்கை வரும் வியாழக்கிழமைதான் நடைபெறுகிறது. இமாசல பிரதேசத்தில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 35 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். குஜராத் இரண்டாம் கட்ட தேர்தல் முடிந்த நிலையில், இமாசல பிரதேச சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சி வெற்றி பெற என்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன் விவரத்தை காணலாம்.

பாஜகவுக்கு வெற்றி
அதன்படி டைம்ஸ் நவ் -இடிஜி நடத்திய கருத்து கணிப்பில், மீண்டும் இமாச்சல பிரதேசத்தில் பாஜகவே வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளது. அதன்படி பாஜக 34 முதல் 42 இடங்களில் வெற்றி பெறும் என்றும் காங்கிரஸ் 24 முதல் 32 இடங்களில் வெற்றி பெறும் என்றும்.. அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி ஒரு இடங்களில் கூட வெற்றி பெற வாய்ப்பு இல்லை என்று தெரிவிகிக்கப்பட்டுள்ளது.

இமாச்சல பிரதேசத்தில் கடும் போட்டி
குஜராத்தை பொறுத்தவரை பாஜக மீண்டும் அங்கு ஆட்சியை பிடிக்கும் என்றே தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் சொல்கின்றன. ஆனால் இமாசல பிரதேசத்தில் கடும் போட்டி நிலவும் என தெரிகிறது. காங்கிரஸ் கட்சியும் நெருங்கி வருவதால் அங்கு தொங்கு சட்டசபை ஏற்படக்கூட வாய்ப்பு உள்ளது. இதனால், இமாசல பிரதேச தேர்தல் முடிவுகள் பெரும் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளன.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications