For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அரே பய்.. இதர் தேக்கோ... இந்தி பேசும் தமிழர்கள் எண்ணிக்கை கிடுகிடு உயர்வு..!

Google Oneindia Tamil News

Recommended Video

    திடீரென அதிகரிக்கும் இந்தி பேசும் தமிழர்களின் எண்ணிக்கை- வீடியோ

    டெல்லி: ஒரு காலத்தில் தமிழகத்தில், இந்திப் படங்களில் மட்டும்தான் இந்தியை அதிகம் பார்க்க முடியும், கேட்க முடியும். ஆனால் இன்று தமிழகத்தில்
    இந்தியின் நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. இந்தி பேசும் தமிழர்களின் (தமிழ்நாட்டவரின்) எண்ணிக்கை 50 சதவீதம் உயர்ந்துள்ளதாக புள்ளிவிவரத் தகவல் தெரிவிக்கிறது.

    2001 -2011 காலகட்டத்தில் இந்தி பேசுவோர் எண்ணிக்கை இந்த அளவுக்கு அதிகரித்துள்ளதாம். இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான் குறைவான
    எண்ணிக்கையில் இந்தி பேசுவோர் உள்ளனர். இங்கு இந்தித் திணிப்புக்கு எதிராக நடந்த புரட்சியே இதற்கு முக்கியக் காரணம். பிற மாநிலங்கள் இந்தித் திணிப்பை ஈஸியாக எடுத்துக் கொண்டன. ஆனால் தமிழ்நாடு மட்டும்தான் எதிர்த்துப் போராடியது.

    இந்த நிலையில் தற்போது இந்திக்கு எதிர்ப்பு என்பது வெகுவாக குறைந்து விட்டது அல்லது அடியோடு நின்று போய் விட்டது. காரணம், நல்ல தலைவர்கள் இல்லை, இந்தி எதிர்ப்பை வலிமையாக வெளிப்படுத்தக் கூடிய அளவிலான உறுதியான தலைவர்கள் இல்லை என்பதே உண்மை. இதனால் படு வேகமாக தமிழகத்தில் இந்தி பரவி வருகிறது.

    [பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வு.. மாதாந்திர பட்ஜெட்டில் துண்டு விழும் நிலை.. மக்கள் அதிர்ச்சி]

    அதிகரிப்பு

    அதிகரிப்பு

    2001 -2011 காலகட்டத்தில் தமிழகத்தில் இந்தி பேசுவோரின் எண்ணிக்கை 50 சதவீதம் அதிகரித்துள்ளதாம். சிபிஎஸ்இ பள்ளிகளில் அதிக அளவில் மாணவர்கள் தற்போது படிப்பதில் ஆர்வம் காட்டுவது இந்தி, மாணவர்கள் அளவில் அதிகரிக்க முக்கியக் காரணமாக கருதப்படுகிறது. இந்தியா பெருமளவிலான மாணவர்கள் தற்போது 2வது அல்லது 3வது மொழியாக எடுக்க ஆர்வம் காட்டுகின்றனராம்.

    இந்தி படிக்க ஆர்வம்

    இந்தி படிக்க ஆர்வம்

    மேலும் தென்னிந்திய இந்தி பிரசார சபை மூலம் இந்தி படிப்போர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறதாம். கடந்த பத்து ஆண்டுகளில் இந்த பிரசார சபை மூலமாக 10.1 லட்சம் பேர் இந்தி படித்துள்ளனராம்.

    இந்தி திணிப்பு

    இந்தி திணிப்பு

    மேலும் தமிழகத்தில் உள்ள தனியார், கான்வென்ட் பள்களில் இந்தியை கட்டாயமாக்கப்பட்டு வருகிறதாம். பல பள்ளிகளில் இந்தி கட்டாயம் என்றும்
    வலியுறுத்துகின்றனராம். இந்தியைப் படிக்குமாறும் மாணவர்கள் ஊக்குவிக்கப்படுகின்றனராம்.

    இந்தி படிக்காவிட்டால்

    இந்தி படிக்காவிட்டால்

    இந்தி படித்தால்தான் வெளி மாநிலங்களில் போய் பிழைக்க முடியும். மற்ற மாநிலத்தவரைப் பாருங்கள் என்ற மறைமுக பயமும் கூட இந்தி கற்போர் அதிகரிக்க முக்கியக் காரணமாக பார்க்கப்படுகிறது. மேலும் பிற மாநிலங்களில் இந்தி தெரிந்தால் எளிதாக வேலை பார்க்க முடியும் என்பதும் தமிழர்கள் மத்தியில் இந்தி அதிகரிக்க முக்கியக் காரணம்.

    எதிர்ப்புகள் குறைந்ததால்

    எதிர்ப்புகள் குறைந்ததால்

    முன்பு போல இப்போது இந்திக்கு எதிர்ப்பு இல்லை. இந்தி எதிர்ப்பு என்பது தமிழகத்தில் சுத்தமாக இல்லாமல் போய் விட்டது. மேலும் தமிழகத்தில் அதிகரித்து -வரும் வட மாநிலத் தாக்கமும் கூட இந்தி அதிகரிப்புக்கு முக்கியக் காரணம். இங்கு வேலைக்கு வரும் வட மாநிலத்தவர் எண்ணிக்கை பேய் வேகத்தில் அதிகரித்து வருகிறது. அவர்களுக்கு இந்தி தவிர வேறு எதுவும் தெரியாது. அவர்களிடம் பேசிப் பேசி இந்தி கற்போர் அதிகரித்து வருகின்றனராம்.

    ஏமாற்றிய தலைவர்கள்

    ஏமாற்றிய தலைவர்கள்

    இதை விட முக்கிய காரணமாக மக்கள் மத்தியில் பார்க்கப்படுவது, இந்தி வேண்டாம் என்று கூறிய பல திராவிடத் தலைவர்களின் பிள்ளைகள், பேரப் பிள்ளைகள், கொள்ளுப் பேரப் பிள்ளைகள் இந்தியில் புகுந்து விளையாடுகின்றனர். அப்படி இருக்கையில் நாம் மட்டும் இந்தி கற்காமல் ஏன் வீணாய்ப் போக வேண்டும் என்ற எண்ணம் மக்கள் மனதில் வலுவாக குடியேறியதும் கூட இந்தி கற்கும் ஆர்வம் அதிகரிக்க முக்கியக் காரணம்.

    எதை வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளுங்க.. தாய் மொழியை அழித்து விடாமல் அதையும் கவனமா பார்த்துக்கங்க

    English summary
    According to a census data, Hindi speaking Tamils are on rise in Tamil Nadu. The data says is is 50% increase during 2001- 2011.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X