ஆமா..குஜராத்தில் பாஜக அதிக தொகுதிகளில் ஜெயிக்க காரணம் என்ன? சூடான தகவலோடு வெளியான ஆய்வு முடிவு
காந்தி நகர்: குஜராத் சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு கிடைத்திருக்கும் வெற்றி அக்கட்சிக்கு மேலும் ஒரு பிரம்மாண்ட பிம்பத்தை அமைத்துக் கொடுத்திருக்கிறது.
குஜராத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 182 தொகுதிகளில் பாஜக 156 இடங்களில் வெற்றி பெற்று சரித்திர வெற்றி பெற்றுள்ளது. குஜராத்தில் பாஜக தொடர்ந்து 7 வது முறையாக வெற்றி பெற்றது அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், குஜராத்தில் இப்படியொரு அசுரத்தனமான வெற்றியை பாஜக பெற்றிருப்பதற்கு காரணங்கள் என்ன என்பது குறித்து லோக் நிதி சமூக வளர்ச்சி ஆய்வு நிறுவனம் (Lokniti-Centre for the Study of Developing Societies) சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. அதுகுறித்த விவரம் வருமாறு:

வரலாற்று வெற்றியை பரிசளித்த மும்முனை போட்டி
கடந்த 2017-ம் ஆண்டு குஜராத் தேர்தலில் பெற்றதை காட்டிலும் இந்த முறை 3 சதவீதம் மட்டுமே அதிக வாக்குகளை பாஜக பெற்றிருக்கிறது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். வெறும் 3 சதவீத வாக்குகளை அதிகம் பெற்று 157 தொகுதிகளில் பாஜகவால் எவ்வாறு வெற்றி பெற முடிந்தது? இதற்கு ஆம் ஆத்மியின் வருகை முதன்மை காரணமாக சொல்லப்படுகிறது. பாஜக எதிர்ப்பு வாக்குகள் அனைத்தையும் காங்கிரஸ் அறுவடை செய்வதை தடுத்த அதில் பாதியை தன் வசம் ஆக்கிக்கொண்டது ஆம் ஆத்மி. குஜராத் தேர்தலில் ஆம் ஆத்மி பெற்ற 12 சதவீத வாக்குகளும் காங்கிரஸுக்கு செல்ல வேண்டிய வாக்குகள் தான். ஆம் ஆத்மி ஏற்படுத்திய இந்த மும்முனை போட்டியே பாஜகவுக்கு இந்த மிகப்பெரிய வரலாற்று வெற்றியை பரிசு அளித்துள்ளது.

மோடி மீதான அசாத்திய நம்பிக்கை
பாஜக மீதும் நரேந்திர மோடி மீதும் குஜராத் மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை, காங்கிரஸ் மீதும் ராகுல் காந்தி மீதும் இல்லை என்பதே குஜராத் தேர்தல் கூறும் மற்றொரு செய்தி ஆகும். குஜராத்தில் நிலவும் விலைவாசி உயர்வு, வேலையின்மை போன்ற எத்தனையோ பிரச்சினைகளை எதிர்க்கட்சிகள் முன்வைத்தன. ஆனால், அந்தப் பிரச்சினைகளை எதிர்க்கட்சிகளால் தீர்க்க முடியாது.. நரேந்திர மோடியால் மட்டுமே தீர்க்க முடியும் என்ற அசாத்திய நம்பிக்கை பெரும்பாலான குஜராத் மக்களுக்கு இருக்கிறது. அதனால்தான், இத்தனை பிரச்சினைகளை எதிர்கொண்ட போதும் குஜராத் மக்கள் பாஜகவுக்கு வாக்களித்துள்ளனர்.

கட்சியை பார்த்து வாக்களித்த மக்கள்
நடந்து முடிந்த குஜராத் தேர்தலை பொறுத்தவரை, வேட்பாளர்களை காட்டிலும் கட்சிகளுக்கே மக்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளனர். அதிலும் பாஜக தான் முன்னிலையில் உள்ளது. அதாவது பாஜகவுக்கு வாக்களித்தவர்களில் 10-இல் 7 பேர் கட்சிக்காகவே வாக்களித்துள்ளனர். வேட்பாளர்களை பற்றி அவர்கள் கவலைப்படவில்லை. காங்கிரஸுக்கு வாக்களித்தவர்களில் 10-இல் 6 பேர் மட்டுமே கட்சிக்காக வாக்களித்திருக்கிறார்கள். 4 பேர் வேட்பாளர்களுக்கு முக்கியத்துவம் அளித்திருக்கிறார்கள். ஆம் ஆத்மிக்கு வாக்களித்தவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் மட்டுமே கட்சியை பார்த்து வாக்களித்துள்ளனர்.

கைக்கொடுத்த பிரச்சாரம்
இந்த குஜராத் தேர்தலை பொறுத்தவரை, கட்சிகளின் பிரச்சாரம் முக்கிய பங்கு வகித்துள்ளது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. பிரச்சாரம் என்று எடுத்துக்கொண்டால் குஜராத்தில் பாஜகவே முன்னிலையில் இருந்தது. அதன்படி, பாஜகவுக்கு வாக்களித்தவர்களில் பாதி பேர் கடைசி நேரத்தில் தங்கள் முடிவை மாற்றி இருப்பது தெரியவந்துள்ளது. அதாவது, அவர்கள் வேறு கட்சிக்கு வாக்களிக்க நினைத்து, பாஜகவின் பிரச்சாரத்தால் ஈர்க்கப்பட்டு அக்கட்சிக்கு வாக்களித்திருக்கிறார்கள். பாஜகவுக்கு வாக்களித்த மக்களில் 22 சதவீதம் பேர் மட்டுமே தேர்தல் பிரச்சாரத்துக்கு முன்கூட்டியே பாஜகவுக்கு தான் எனது ஓட்டு என முடிவு செய்தவர்கள். இவ்வாறு காங்கிரஸுக்கு தான் எனது ஓட்டு என முன்கூட்டியே முடிவு செய்தவர்கள் மிக சொற்பமான பேரே உள்ளனர். எனவே, பாஜகவின் தேர்தல் பிரச்சாரமே அக்கட்சிக்கு முக்கிய பலமாக இருந்திருக்கிறது.

பிராந்தியங்கள் அளித்த வெற்றி
மற்ற மாநிலங்களை போல அல்லாமல், குஜராத்தில் ஓரிரு பிராந்தியங்கள் தான், மாநிலத்தில் யார் ஆட்சியை அமைக்கப்போவது என்பதை தீர்மானிக்கின்றன. அதில் முதலாவது சவுராஷ்ட்ரா பிராந்தியம். இந்த பிராந்தியத்தை ஆரம்பத்தில் இருந்தே குறிவைத்து அங்கு பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி பெற்றது பாஜக. இங்கு காங்கிரஸும், ஆம் ஆத்மியும் இணைந்து பெற்றிருக்கும் வாக்கு சதவீதத்தை தனியொரு கட்சியாக பாஜக பெற்றிருக்கிறது. இதேபோல, வடக்கு மற்றும் மத்திய குஜராத் பிராந்தியங்களிலும் பாஜக ஏராளமான தொகுதிகளை கைப்பற்றி இருக்கிறது.

இளைஞர்கள் வாக்கு
இவை ஒருபுறம் இருக்க, 35 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களை பாஜக கவர்ந்ததுதான் குஜராத்தில் அக்கட்சி பெற்றிருக்கும் வரலாற்று வெற்றிக்கு முக்கிய காரணம் எனத் தெரியவந்துள்ளது. அதேபோல், நடுத்தர வயதினர் (46-55) பெரும்பாலானோரும் பாஜகவுக்கு வாக்களித்திருக்கிறார்கள். இளைஞர்களும், நடுத்தர வயதினரும் தான் குஜராத்தில் அதிகம் என்பதால் இதுவும் பாஜகவுக்கு சாதகமாகிவிட்டது. இந்த வயதினரை கவர காங்கிரஸும், ஆம் ஆத்மியும் தவறிவிட்டது.

வெற்றிக்கு மகுடம் பதித்த படித்தவர்கள் வாக்கு..
இவை எல்லாவற்றுக்கும் மேலாக, இந்த முறை படித்தவர்கள் பெரும்பாலும் தங்கள் வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் பாஜகவுக்கு செலுத்தியுள்ளது அக்கட்சியின் வெற்றிக்கு மகுடமாக இருப்பாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. அதனால் நகர்ப்புறங்களில் சுனாமி அலை போல வாக்குகளை வாரிச் சென்றிருக்கிறது பாஜக. ஒருகாலத்தில், படித்தவர்களின் ஓட்டுகள் காங்கிரஸுக்கு தான் விழும் என்ற நிலை குஜராத்தில் இருந்தது. ஆனால் அதை தலைகீழாக தற்போது மாற்றியுள்ளது பாஜக. அதேபோல், இந்த முறை தங்களுக்கான உயர் ஜாதி வாக்குகளை பாஜக அதிகரித்துள்ளது. 10 சதவீத இடஒதுக்கீடு இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. மேலும் தலித், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டோர் சமூக வாக்குகளும் பாஜகவுக்கு அதிகமாக கிடைத்துள்ளன. அதே நேரத்தில், இஸ்லாமியர்கள் வாக்குகள் கடந்த தேர்தலை ஒப்பிடும் போது பாஜகவுக்கு 27 சதவீதத்தில் இருந்து 14 சதவீதமாக சரிந்திருக்கிறது. காங்கிரஸுக்கோ இஸ்லாமியர் வாக்குகள் 64 சதவீதம் அதிகரித்துள்ளது. இருந்தபோதிலும், பாஜகவின் வெற்றியை இது தடுக்கவில்லை என்பதே கள ஆய்வு முடிவுகளாக இருக்கிறது.
-
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்? -
ஜனநாயகன் ரூ.500 கோடி பட்ஜெட் படம்! HD பிரிண்ட்டில் வெளியானது எப்படி? தமிழக டிஜிபியிடம் புகார் -
நம்பர் 5.. அடித்து சொல்லும் சர்வேக்கள்! திமுக+ 180 இடங்களை தாண்டுகிறது! அதிமுக ஓவர்? முக்கிய கணிப்பு












Click it and Unblock the Notifications