பாஜகவிற்கு பேரதிர்ச்சி! தாமரைக்கு வாக்களிக்க கூடாது! உ.பி, குஜராத் பஞ்சாயத்தில் சத்திரியர்கள் முடிவு
லக்னோ: குஜராத்தில் பாஜகவிற்கு எதிராக பல்வேறு சத்திரிய இடைநிலை ஜாதி குழுக்கள் திரும்பிய நிலையில் தற்போது உத்தர பிரதேசத்திலும் பாஜகவிற்கு சத்திரியர்கள் பாஜகவிற்கு எதிராக களம்காண தொடங்கி உள்ளனர்.
ராஜ்புட் உள்ளிட்ட சத்திரிய வம்சத்து மன்னர்கள் இஸ்லாமியர்களுடன்நெருக்கமாக , அடிமை போல இருந்தனர். இஸ்லாமிய மன்னர்கள் கொடுத்ததை வைத்து ஆட்சி செய்தனர் . தங்கள் பெண்களை கூட இஸ்லாமியர்களுக்கு மணமுடித்து கொடுத்தனர் என்று விமர்சனம் செய்யும் தொனியில் மத்திய மந்திரி பர்ஷோத்தம் ரூபாலா பேசி இருந்தார். பாஜகவை சேர்ந்த மத்திய மந்திரி பர்ஷோத்தம் ரூபாலா இதன் மூலம் சத்திரிய வம்சத்து அரசர்களை அவமதித்துவிட்டதாக சத்திரியர் இடையே விமர்சனம் வைக்கப்பட்டது.

மத்திய மந்திரி பர்ஷோத்தம் ரூபாலாவின் கருத்துக்கு எதிராக குஜராத்தில் பாஜகவுக்கு எதிராக 'சத்திரிய' சமூகத்தினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில்தான், உத்தரபிரதேசத்தின் சஹாரன்பூர் மாவட்டத்தில் நேற்று 'சத்திரிய' சமூகத்தினர் பாஜகவிற்கு எதிராக பஞ்சாயத்து நடத்தினர். சத்திரிய சமூகத்தின் நலன்கள் மற்றும் வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் பாஜக வேட்பாளர்களை 'எதிர்ப்பது' பற்றி இதில் ஆலோசிக்கப்பட்டது.
பாஜகவிற்கு எதிராக செயல்பட வேண்டும் என்று சத்திரிய ஜாதி பிரிவை சேர்ந்த உறுப்பினர்களுக்கு இந்த பஞ்சாயத்தில் அறிவுறுத்தப்பட்டது.
சஹாரன்பூர் மாவட்டத்தில் உள்ள நானௌடா என்ற இடத்தில் நடைபெற்ற இந்த பஞ்சாயத்தில் ஹரியானா, ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட மாநிலம் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சத்திரிய சமுதாய தலைவர்கள் கலந்து கொண்டனர். உத்தர பிரதேசம் மட்டுமின்றி நாடு முழுக்க எந்த மாநிலத்திலும் சத்திரியர்கள் பாஜகவிற்கு வாக்களிக்க கூடாது என்று இதில் முடிவு எடுக்கப்பட்டது.
வடஇந்திய பஞ்சாயத்துகளில் எடுக்கப்படும் முடிவுகள், அதில் கலந்து கொள்ளும் எல்லோராலும் மிக தீவிரமாக கடைபிடிக்கப்படும் என்பதால் பாஜகவிற்கு இந்த முடிவு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கிசான் மஸ்தூர் சங்கதன் தலைவரும், சமூகத் தலைவருமான தாக்கூர் பூரன் சிங் இது பற்றி கூறுகையில், பாஜக வேட்பாளர்களை தோற்கடிக்க எந்த கட்சிக்கு சிறந்த வாய்ப்பு உள்ளதோ அந்த கட்சிக்கு எங்கள் சமூகத்தினர் ஆதரவளிப்பார்கள். நாங்கள் எப்போதும் பாஜகவை ஆதரித்தோம், ஆனால் அவர்கள் ராஜ்புத் தலைவர்களை ஓரங்கட்டி வருகின்றனர். லோக்சபா தேர்தலுக்கான டிக்கெட் விநியோகத்தில் எங்கள் சமூகம் புறக்கணிக்கப்பட்டுள்ளது, என்றுள்ளார்.
பஞ்சாயத்தில் பேசிய பேச்சாளர்கள், தங்கள் சமூகத் தலைவர்களுக்கு பாஜக அமைப்பிலும் பதவி வழங்கப்படவில்லை. சமூகத்தினர் ஒற்றுமையாக இருந்து தேர்தலில் காவி கட்சியை எதிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். மக்களவைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவுக்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக, ஏப்ரல் 16 அன்று மீரட் மாவட்டத்தில் உள்ள சர்தானாவில் சமூகத் தலைவர்களின் மற்றொரு கூட்டத்தை நடத்த பஞ்சாயத்து முடிவு செய்தது.
மேற்கு உ.பி.யின் சஹாரன்பூர், மீரட், முசாபர்நகர், பாக்பத், கைரானா, காசியாபாத் மற்றும் கௌதம் புத் நகர் உள்ளிட்ட எட்டு மக்களவைத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 19-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதேபோன்ற பஞ்சாயத்துகள் சில நாட்களுக்கு முன்பு முசாபர்நகர் மாவட்டத்திலும் நடைபெற்றன. பாஜக வேட்பாளர் சஞ்சீவ் பாலியானை எதிர்க்குமாறு சமூகத்தினரை கேட்டுக் கொண்டார்.
குஜராத்தில் சத்திரிய சமூகத்தைச் சேர்ந்த மன்னர்கள் முஸ்லிம் ஆட்சியாளர்களின் துன்புறுத்தலுக்கு இணங்கி, அவர்களுக்குத் தங்கள் மகள்களைத் திருமணம் செய்து வைத்ததாக ரூபாலா கூறிய கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த சமூகத்தின் பஞ்சாயத்துகள் முடிவு எடுத்த நிலையில் தற்போது சத்திரியர்கள் vs பாஜக மோதல் வடஇந்தியாவில் தீ போல பரவ தொடங்கி உள்ளது.
லக்னோ: குஜராத்தில் பாஜகவிற்கு எதிராக பல்வேறு சத்திரிய இடைநிலை ஜாதி குழுக்கள் திரும்பிய நிலையில் தற்போது உத்தர பிரதேசத்திலும் பாஜகவிற்கு சத்திரியர்கள் பாஜகவிற்கு எதிராக களம்காண தொடங்கி உள்ளனர்.
ராஜ்புட் உள்ளிட்ட சத்திரிய வம்சத்து மன்னர்கள் இஸ்லாமியர்களுடன்நெருக்கமாக , அடிமை போல இருந்தனர். இஸ்லாமிய மன்னர்கள் கொடுத்ததை வைத்து ஆட்சி செய்தனர் . தங்கள் பெண்களை கூட இஸ்லாமியர்களுக்கு மனம் முடித்து கொடுத்தனர் என்று விமர்சனம் செய்யும் தொனியில் மத்திய மந்திரி பர்ஷோத்தம் ரூபாலா பேசி இருந்தார். பாஜகவை சேர்ந்த மத்திய மந்திரி பர்ஷோத்தம் ரூபாலா இதன் மூலம் சத்திரிய வம்சத்து அரசர்களை அவமதித்துவிட்டதாக சத்திரியர் இடையே விமர்சனம் வைக்கப்பட்டது.
மத்திய மந்திரி பர்ஷோத்தம் ரூபாலாவின் கருத்துக்கு எதிராக குஜராத்தில் பாஜகவுக்கு எதிராக 'சத்திரிய' சமூகத்தினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில்தான், உத்தரபிரதேசத்தின் சஹாரன்பூர் மாவட்டத்தில் நேற்று 'சத்திரிய' சமூகத்தினர் பாஜகவிற்கு எதிராக பஞ்சாயத்து நடத்தினர். சத்திரிய சமூகத்தின் நலன்கள் மற்றும் வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் பாஜக வேட்பாளர்களை 'எதிர்ப்பது' பற்றி இதில் ஆலோசிக்கப்பட்டது.
பாஜகவிற்கு எதிராக செயல்பட வேண்டும் என்று சத்திரிய ஜாதி பிரிவை சேர்ந்த உறுப்பினர்களுக்கு இந்த பஞ்சாயத்தில் அறிவுறுத்தப்பட்டது.
சஹாரன்பூர் மாவட்டத்தில் உள்ள நானௌடா என்ற இடத்தில் நடைபெற்ற இந்த பஞ்சாயத்தில் ஹரியானா, ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட மாநிலம் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சத்திரிய சமுதாய தலைவர்கள் கலந்து கொண்டனர். உத்தர பிரதேசம் மட்டுமின்றி நாடு முழுக்க எந்த மாநிலத்திலும் சத்திரியர்கள் பாஜகவிற்கு வாக்களிக்க கூடாது என்று இதில் முடிவு எடுக்கப்பட்டது.
வடஇந்திய பஞ்சாயத்துகளில் எடுக்கப்படும் முடிவுகள், அதில் கலந்து கொள்ளும் எல்லோராலும் மிக தீவிரமாக கடைபிடிக்கப்படும் என்பதால் பாஜகவிற்கு இந்த முடிவு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கிசான் மஸ்தூர் சங்கதன் தலைவரும், சமூகத் தலைவருமான தாக்கூர் பூரன் சிங் இது பற்றி கூறுகையில், பாஜக வேட்பாளர்களை தோற்கடிக்க எந்த கட்சிக்கு சிறந்த வாய்ப்பு உள்ளதோ அந்த கட்சிக்கு எங்கள் சமூகத்தினர் ஆதரவளிப்பார்கள். நாங்கள் எப்போதும் பாஜகவை ஆதரித்தோம், ஆனால் அவர்கள் ராஜ்புத் தலைவர்களை ஓரங்கட்டி வருகின்றனர். லோக்சபா தேர்தலுக்கான டிக்கெட் விநியோகத்தில் எங்கள் சமூகம் புறக்கணிக்கப்பட்டுள்ளது, என்றுள்ளார்.
பஞ்சாயத்தில் பேசிய பேச்சாளர்கள், தங்கள் சமூகத் தலைவர்களுக்கு பாஜக அமைப்பிலும் பதவி வழங்கப்படவில்லை. சமூகத்தினர் ஒற்றுமையாக இருந்து தேர்தலில் காவி கட்சியை எதிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். மக்களவைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவுக்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக, ஏப்ரல் 16 அன்று மீரட் மாவட்டத்தில் உள்ள சர்தானாவில் சமூகத் தலைவர்களின் மற்றொரு கூட்டத்தை நடத்த பஞ்சாயத்து முடிவு செய்தது.
மேற்கு உ.பி.யின் சஹாரன்பூர், மீரட், முசாபர்நகர், பாக்பத், கைரானா, காசியாபாத் மற்றும் கௌதம் புத் நகர் உள்ளிட்ட எட்டு மக்களவைத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 19-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதேபோன்ற பஞ்சாயத்துகள் சில நாட்களுக்கு முன்பு முசாபர்நகர் மாவட்டத்திலும் நடைபெற்றன. பாஜக வேட்பாளர் சஞ்சீவ் பாலியானை எதிர்க்குமாறு சமூகத்தினரை கேட்டுக் கொண்டார்.
குஜராத்தில் சத்திரிய சமூகத்தைச் சேர்ந்த மன்னர்கள் முஸ்லிம் ஆட்சியாளர்களின் துன்புறுத்தலுக்கு இணங்கி, அவர்களுக்குத் தங்கள் மகள்களைத் திருமணம் செய்து வைத்ததாக ரூபாலா கூறிய கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த சமூகத்தின் பஞ்சாயத்துகள் முடிவு எடுத்த நிலையில் தற்போது சத்திரியர்கள் vs பாஜக மோதல் வடஇந்தியாவில் தீ போல பரவ தொடங்கி உள்ளது.
-
“வெறும் காகிதத்தில் மட்டுமே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா?”.. முதல்வர் விஜய்க்கு பாஜக கேள்வி! -
கூண்டோடு கலைஞ்சிருச்சா?" பாஜகவின் சைலண்ட் கேம்... தனித்து விடப்பட்டாரா அமமுக டிடிவி தினகரன்? -
பாஜகவை விட்டு விலகிய முன்னாள் MP நரசிம்மன்.. அண்ணாமலை பேச்சை கேட்டிருந்தா இந்நேரம் பாஜக ஆட்சியாம்! -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
யூடியூபர் முக்தார் கைது.. அலிசா அப்துல்லா புகாரில் தலைமறைவாக இருந்தவர் மைசூரில் பிடிபட்டார் -
ரஜினிகாந்த் மருமகன் விசாகன்.. அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையப் போகிறார்? ட்விஸ்ட் -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை

Click it and Unblock the Notifications