For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஒபாமா கேரை காட்டிலும் மோடி கேரே பெஸ்ட்... ஏகப்பட்ட வித்தியாசங்க இருக்குங்க!

ஒபாமா கேரை காட்டிலும் மோடி கேரே பெஸ்ட் என்றும் உலகின் மிகப் பெரிய மருத்துவ காப்பீடு திட்டம் என்றும் கூறப்படுகிறது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    ஒபாமா கேரை காட்டிலும் மோடி கேர்தான் பெஸ்ட்..எப்படி?- வீடியோ

    டெல்லி: ஒபாமா கேரை காட்டிலும் மோடி கேர்தான் பெஸ்ட் என்று சொல்லும் அளவுக்கு இரண்டுக்கும் ஏகப்பட்ட வித்தியாசங்கள் உள்ளன.

    இன்று பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது 10 கோடி குடும்பங்களுக்கு தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டத்தின் கீழ் தலா ரூ. 5 லட்சம் மருத்துவ காப்பீடு வழங்கப்படுகிறது. இது மிகவு்ம முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    பிரதமர் மோடியும் இதுகுறித்து டுவிட்டரில் கூறியுள்ளார். உலகிலியே மிகச் சிறந்த மற்றும் பெரிய மருத்துவ காப்பீடு திட்டம் இந்தியாவில்தான் அறிமுகப்படுத்தப்படவுள்ளது என்று மோடி குறிப்பிட்டுள்ளார். இந்த திட்டம் அறிவித்த சில மணி நேரங்களிலேயே ஒபாமா கேர் போல் மோடி கேர் என்ற நம்மாட்கள் கம்பேரிஷன் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.

    ஒபாமா கேரில் என்ன இருக்கு

    ஒபாமா கேரில் என்ன இருக்கு

    ஒபாமா கேர் ஆரம்பத்தில் நோயாளி பாதுகாப்பு மற்றும் அவர்களால் முடியும் அளவுக்கு செலவு செய்வதை உறுதிப்படுத்தும் சட்டம் என்ற பெயரில் அழைக்கப்பட்டது. அதில் ஏராளமான மருத்துவ காப்பீடுகளும், தொழில் சீர்திருத்தங்களும் இருந்தன. இவை அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு கடந்த 2010-ஆம் ஆண்டு அதிபராக இருந்த பராக் ஒபாமாவால் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தின் நோக்கமே மருத்துவ காப்பீட்டை விரிவுப்படுத்துவதும், மருத்துவர்களுக்கு அரசு பணம் செலுத்தும் முறையை மாற்றுவதும் ஆகும்.

    எத்தனை சதவீதம் பேர்

    எத்தனை சதவீதம் பேர்

    இந்த திட்டத்தின் படி 2.5 கோடி அமெரிக்கர்கள் பயன்பெறுவர் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதுபோல் அமெரிக்க மக்கள்தொகையில் 15 சதவீதம் பேர் பயன் பெற கூடும் என்றும் உத்தேசிக்கப்பட்டது. ஆனால் பிரதமர் மோடியின் பார்வையோ தொலைநோக்கு பார்வையாகும். அதன்படி ஒபாமா கேரையை அடித்துக் கொள்ளும் அளவுக்கு மோடி கேர் திட்டம் கொண்டு வரப்படவுள்ளது.

    மோடி கேர் என்ன

    மோடி கேர் என்ன

    மோடி அரசின் நோக்கம் ஒபாமா கேரை காட்டிலும் மிகப் பெரியதாகும். ஒபாமா கேர் மூலம் 2.5 கோடி மக்களே பயன்பெற முடியும். ஆனால் மோடி கேரால் 10 கோடி குடும்பங்கள் என்றால் தோராயமாக 50 கோடி பேர் பயனடைவர். இந்திய மக்கள்தொகையில் 37 சதவீதம் பேர் பயனடைவர், ஆனால் அந்த திட்டத்தில் அமெரிக்க மக்கள்தொகையில் 15 சதவீதம் பேர் மட்டுமே பயனடைவர்.

    இந்திய அரசின் சட்டம் தெரியவில்லை

    இந்திய அரசின் சட்டம் தெரியவில்லை

    அதுபோல் ஒபாமாவின் கேரானது சாதாரண மருத்துவ காப்பீடு திட்டத்தைவிட ஒரு படி மேலானது. ஒபாமா கேர் விதித்த சட்டத்தால் மருத்துவமனைகள், மருத்துவர்கள் பாதிக்கப்பட்டனர். அதோடு ரெஸ்டாரென்டுகள், ஐஸ்கிரீம் பார்லர்களும் பாதிக்கப்பட்டன. இந்த திட்டத்தின் படி மருத்துவர்களுக்கான ஊதியத்தை மாற்றி வழங்கும்படியாக இருந்தது. ஆனால் மோடி கேரில் மருத்துவர்களுக்கு இந்திய அரசு எப்படி ஊதியம் வழங்கும் என்பது குறித்து குறிப்பிடப்படவில்லை. இதில் பார்க்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் நம் இந்தியாவில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் மிகவும் குறைவு. இருவரின் விகிதமும் எங்கோ கிடக்கிறது. ஒபாமா கேர் சட்டத்தின்படி முன்கூட்டியே உடல் நலம் பாதிக்கப்பட்ட நோய்களுக்கு காப்பீடு தொகை தர மறுக்கும் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தடை செய்யப்பட்டன. ஆனால் இந்திய அரசு அதுபோன்ற எவ்வித அறிவிப்பையும் குறிப்பிடவில்லை.

    English summary
    Here are the differences between Modi care and Obama Care. Whichone is best?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X