For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாஸ்போர்ட்டை தொலைத்த மனைவி.. தனியாக ஹனிமூன் சென்ற கணவர்... உதவிக் கரம் நீட்டிய சுஷ்மா

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: மனைவி பாஸ்போர்ட்டை தொலைத்துவிட்டதால் தனியாக ஹனிமூன் சென்ற நபருக்கு உடனடியாக உதவ முன்வந்துள்ளார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ்.

இந்த சுவாரசிய சம்பவம் குறித்த விவரம் இதுதான். ஃபைசான் பட்டேல் என்பவர் தனது டிவிட்டர் கணக்கில் சில தகவல்களை கூறியிருந்தார்.

அதில், எனது மனைவி பாஸ்போர்ட்டை தொலைத்துவிட்டதால் துருக்கி ஏர்லைன்சில் நான் தனியாகவே பயணிக்கிறேன், என்று குறிப்பிட்டிருந்தார்.

சீட்டில் மனைவி போட்டோ

மேலும் தனது மனைவி போட்டோவை பக்கத்து சீட்டில் வைத்தபடி, இப்படித்தான் மனைவியோடு டிராவல் செய்கிறேன் என்ற ஒரு போட்டோவையும், டிவிட்டரில் வெளியிட்டு அதை வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், வெளியுறவு அமைச்சக டிவிட்டர் ஹேண்டில்களுடன் டேக் செய்திருந்தார்.

ஆச்சரியம்

ஆச்சரியம்

ஆனால், என்ன ஆச்சரியம்.. உடனே சுஷ்மா சுவராஜிடமிருந்து டிவிட்டரில் பதில் வந்தது. உங்கள் மனைவியை என்னை தொடர்பு கொள்ள செய்யுங்கள். உங்கள் பக்கத்து சீட்டில் மனைவியை அமரச் செய்கிறேன் என்று அதில் சுஷ்மா குறிப்பிட்டிருந்தார். மேலும், டூப்ளிகேட் பாஸ்போர்ட் ஏற்பாடு செய்துள்ளதாக மற்றொரு டிவிட்டிலும் சுஷ்மா தெரிவித்துள்ளார்.

பாஸ்போர்ட் மிஸ்

பாஸ்போர்ட் மிஸ்

ஃபைசான் பட்டேல் ஹனிமூனுக்காக, ஐரோப்பா செல்வதாக திட்டமிட்டுள்ளார். ஆனால், மனைவி சனாவுக்கு விசா கிடைத்தபோதிலும், பாஸ்போர்ட்டை தொலைத்துவிட்டதால்தான் அவரால் பயணிக்க முடியவில்லையாம்.

பாராட்டு

பாராட்டு

சாமானிய குடி மகன் ஒருவரின் கோரிக்கையை உடனே நிறைவேற்ற முன்வந்த சுஷ்மா சுவராஜை வலைவாசிகள் பாராட்டி மகிழ்கிறார்கள். ஃபைசானும் பாராட்ட வார்த்தைகளே இல்லை என சுஷ்மாவை டிவிட்டரில் புகழ்ந்துள்ளார்.

உதவுவது வழக்கம்

உதவுவது வழக்கம்

சுஷ்மா சுவராஜை டிவிட்டர் மூலம் தொடர்பு கொண்டு உதவி கேட்ட வெளிநாடு வாழ் இந்தியர்கள் பலருக்கு அவர் உதவிகளை செய்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Husband leaves alone for honeymoon, Sushma Swaraj steps in and helps his wife get visa.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X