எனக்கு யாரை பார்த்தும் பயமில்லை.. திலீப் பரபரப்பு பேட்டி

Posted By:
Subscribe to Oneindia Tamil

கொச்சி: எனக்கு யாரை பார்த்தும் பயமில்லை என்று பாவனா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட திலீப் தெரிவித்துள்ளார்.

நடிகை பாவனா கடத்தப்பட்டு, பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட வழக்கில் நடிகர் திலீப் நேற்று இரவு கைது செய்யப்பட்டார்.

திலீப் இன்று காலை கொச்சி அங்கமாலியிலுள்ள நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.

 பலத்த பாதுகாப்பு

பலத்த பாதுகாப்பு

நீதிபதி முன்னிலையில் திலீப் ஆஜர்படுத்தப்பட்டபோது பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ரசிகர்களும் அப்பகுதியில் குவிந்து, திலீப்பை பார்க்க ஆர்வம் காட்டினர்.

 ஜாமீன் மனு

ஜாமீன் மனு

நீதிபதி, திலீப்புக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்தார். இதையடுத்து நாளை அவருக்கு ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்ய திலீப் தரப்பு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Malayalam Actress abduction case, Dileep says "I am not scared of anyone"-Oneindia Tamil
 சிறையில் அடைப்பு

சிறையில் அடைப்பு

கொச்சி அருகேயுள்ள ஆலுவா நகரில் உள்ள சார்-சிறையில் திலீப் அடைக்கப்படுகிறார். இதையடுத்து அவர் போலீஸ் வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டார்.

 பயமில்லை

பயமில்லை

முன்னதாக நிருபர்களிடம் அவர் கூறுகையில், நான் யாருக்காகவும் அஞ்சவில்லை. ஏனெனில் நான் எந்த குற்றமும் செய்யவில்லை என்றார். இவரது மனைவியும் நடிகையுமான காவ்யா மாதவனுக்கும் கடத்தல் சம்பவத்தில் தொடர்புள்ளதாக சந்தேகிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
"I am not scared of anyone as I have not committed any crime," Dileep told reporters when he arrives at magistrate's house.
Please Wait while comments are loading...