பணமதிப்பிழப்பு நீக்கம்.. இந்திய மக்களுக்கு என் தலை தாழ்ந்த வணக்கங்கள்: மோடி

Posted By:
Subscribe to Oneindia Tamil
  ரூ.500, ரூ.1000 நோட்டுகளுக்கு குட் பை சொன்ன நாள் இன்று...வீடியோ

  டெல்லி: பிரதமர் மோடி பண மதிப்பிழப்பு அறிவிப்பை வெளியிட்டு ஓராண்டு ஆகியுள்ளது. நவம்பர் 8ம் தேதி இரவு, பிரதமர் மோடி திடீரென தொலைக்காட்சியில் தோன்றி, புழக்கத்திலிருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்தபோது, மக்கள் மத்தியில் ஒரே கொந்தளிப்பு.

  ஏடிஎம் மற்றும் வங்கிகளில் கியூவில் நின்றோர் பலர் பலியான நிலையிலும், இந்த நடவடிக்கையால் முழு வெற்றி கிடைத்ததா என்றால் பொருளாதார நிபுணர்கள் பதில் அப்படியெல்லாம் இல்லை என்பதாகவே உள்ளது.

  இந்த நிலையில், பணமதிப்பிழப்பு நாளை கருப்பு தினமாக எதிர்க்கட்சிகள் அனுசரித்து வருகின்றன. ஆனால் பதிலடியாக அரசு பல்வேறு விளம்பரங்கள் மூலமும், அமைச்சர்கள் பிரஸ் மீட்டுகள் மூலமும் பணமதிப்பிழப்பு நன்மைகள் குறித்து எடுத்துரைத்து வருகிறது.

  அரசு பதிலடி

  அரசு பதிலடி

  இந்த நிலையில், பிரதமர் மோடி தனது டிவிட்டர் தளம் மூலமாக மக்ளுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டுள்ளார். கறுப்பு பண எதிர்ப்பு நாளாக இன்றைய தினத்தை அரசு சார்பில் கொண்டாட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

  தலைவணங்குகிறேன்

  ஊழலையும், கருப்பு பணத்தையும் ஒழிக்க அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளித்த மக்களுக்கு நான் தலைவணங்குகிறேன் என்று ஒரு டிவிட்டில் குறிப்பிட்டுள்ளார் மோடி.

  குறும்படம் வெளியிட்ட மோடி

  மற்றொரு டிவிட்டில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் நிகழ்ந்த நன்மைகள் இவைதான் என்று ஒரு குறும்படத்தை டிவிட்டரில் அவர் வெளியிட்டுள்ளார்.

  வெற்றி, வெற்றி

  125 கோடி மக்களும் போரிட்டு வெற்றி பெற்றனர் என்று பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு மற்றொரு டிவிட்டில் புகழாரம் சூட்டியுள்ளார் மோடி. கருப்பு பணத்திற்கு எதிரான நாள் என்று பொருள்படும் ஆங்கில ஹேஷ்டேக்கை அனைத்து டிவிட்டுகளிலும் பயன்படுத்தியுள்ளார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  The prime minister, however, termed the drive as a "historic and multi-dimensional success", and said 125 crore people fought the "decisive battle against black money and corruption".

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற