புதிய அணிதான் தொடங்கப்போறேன்... தனிகட்சியில்லை - டிடிவி தினகரன்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  டிடிவி தினகரன் புதுகட்சி தொடங்குகிறார்..வீடியோ

  டெல்லி: மதுரையில் எங்களது அணியின் பெயரை நாளை அறிவிக்க உள்ளோம் என்று தினகரன் கூறியுள்ளார். புதிய அணி தான் தொடங்கப் போகிறோம் புதிய அணி அல்ல என டிடிவி. தினகரன் கூறியுள்ளார்.

  ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது இரட்டை இலை சின்னத்துக்கு தினகரனும், மதுசூதனனும் உரிமை கோரியதால் சின்னத்தை தேர்தல் கமி‌ஷன் முடக்கியது.

  டி.டி.வி. தினகரன் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த சின்னத்தை பயன்படுத்திக் கொள்ள டெல்லி உயர்நீதிமன்றம் அவருக்கு அனுமதி வழங்கியது.

  இதைத் தொடர்ந்து டி.டி.வி. தினகரன் புதிய அமைப்பை தொடங்கி ஜெயலலிதா ஆட்சி அமைய பாடுபடுவோம் என தெரிவித்திருந்தார்.

  பிரம்மாண்ட விழா

  பிரம்மாண்ட விழா

  புதிய அமைப்பு மற்றும் கொடியை அறிமுகப்படுத்தும் விழா மதுரை மாவட்டம், மேலூரில் நாளை காலை நடைபெற உள்ளது. மேலூர்-அழகர் கோவில் ரோட்டில் எஸ்.பி.ஆர். திடலில் இதற்காக பிரமாண்ட பொதுக்கூட்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது.

  கொடி ஏற்றும் தினகரன்

  கொடி ஏற்றும் தினகரன்

  லட்சக்கணக்கானோர் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. விழா திடலில் 100 அடி உயர கம்பம் நடப்பட்டுள்ளது. நாளை காலை 9 மணிக்கு தொடங்கும் இந்த விழாவில் தினகரன் பங்கேற்று புதிய அமைப்பின் பெயர், கொடியை அறிமுகம் செய்து பேசுகிறார்.

  அணியின் பெயர்

  அணியின் பெயர்

  அனைத்திந்திய அண்ணா அம்மா திராவிட முன்னேற்றக் கழகம், எம்ஜிஆர் அம்மா திராவிட முன்னேற்றக் கழகம், எம்ஜிஆர் அம்மா திராவிட கழகம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை கொடுக்குமாறு டிடிவி தினகரன் கேட்டுள்ளார்.
  இதில் கொடுக்கும் பெயர்களை தனது அணியின் பெயராக அறிவிப்பார் தினகரன்.

  மதுரையில் கூட்டம்

  மதுரையில் கூட்டம்

  இந்த நிலையில் டிடிவி தினகரன் நாளைய தினம் புதிய அணியின் பெயரை மட்டுமே அறிவிக்கப் போவதாகவும், புதிய கட்சி தொடங்கவில்லை என்றும் டெல்லியில் கூறியுள்ளார். நாளை நடைபெற உள்ள கூட்டத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கானோர் இதில் பங்கேற்பார்கள் என தெரிகிறது.

  ஜெயலலிதா உருவம்

  ஜெயலலிதா உருவம்

  டிடிவி தினகரன் ஏற்கனவே கறுப்பு வெள்ளை சிவப்பு நிறம் கொண்ட கொடியை பயன்படுத்தி வருகிறார். புதிய அமைப்பின் கொடியில் ஜெயலலிதா படம் இடம் பெற வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மனது ஸ்லீப்பர் செல் எம்எல்ஏக்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்க மாட்டார் என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  TTV Dinakaran said that press person in Delhi to launch new political party, unveil flag on March 15 in Tamil Nadu's Madurai

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற