For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

7 தமிழரை விடுவிப்பது குறித்து மத்திய அரசுதான் முடிவெடுக்க வேண்டும்: ராகுல் காந்தி

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 7 தமிழரை விடுதலை செய்யும் தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து மத்திய அரசுதான் முடிவெடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 7 தமிழரை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து மத்திய அரசின் கருத்து கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

I would not like to express my opinion, says Rahul

இந்த விவகாரத்தை காங்கிரஸ் கட்சி இன்று லோக்சபாவில் எழுப்பியது. 7 தமிழர் விடுதலைக்கு லோக்சபா காங்கிரஸ் குழுத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

இதனிடையே நாடாளுமன்றத்தில் வளாகத்தில் ராகுல்காந்தியிடம் இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, இது குறித்து நான் பேசவிரும்பவில்லை.. மத்திய அரசுதான் முடிவெடுக்க வேண்டும்; ராஜிவ் காந்தியின் மகனாக நான் என்ன நினைக்கிறேன் என்பதை வெளிப்படுத்த விரும்பவில்லை என்றார் ராகுல் காந்தி.

English summary
Congress Vice President Rahul Gandhi said that, As a son I would not like to express my opinion on Rajiv killers' release issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X