For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விமானப் படை அதிகாரிகள் பணியில் இருக்கும் போது தாடி வளர்க்க கூடாது: சுப்ரீம்கோர்ட் அதிரடி உத்தரவு

விமானப் படை அதிகாரிகள் பணியில் இருக்கும் போது தாடி வளர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றம் இன்று இந்த உத்தரவை பிறப்பித்தது.

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: விமானப் படை அதிகாரிகள் பணியில் இருக்கும் தாடி வளர்க்க தடை விதித்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

விமானப் படை அதிகாரியாக இருந்தவர் அன்சாரி அப்தாப். 2008-ம் ஆண்டு நீண்ட தாடி வைத்திருந்த காரணத்தால் விமானப் படையில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.

IAF officers can’t grow beard, says SC

இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அன்சாரி வழக்கு தொடர்ந்தார். தாம் தாடி வைப்பது என்பது மதரீதியான என அன்சாரி தம்முடைய மனுவில் வலியுறுத்தியிருந்தார்.

அன்சாரியின் இம்மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ். தாக்கூர் தலைமையிலான பெஞ்ச் இன்று விசாரித்தது. அப்போது, விமானப் படை அதிகாரிகளுக்கான கட்டுப்பாடுகள், ஒழுக்கம் என்பது ஒரே சீரானதாக இருக்க வேண்டும். ஆகையால் விமானப் படை அதிகாரிகள் பணியில் இருக்கும் போது மதரீதியான காரணங்களுக்காக தாடி வளர்க்க கூடாது என்று உத்தரவிட்டனர்.

மேலும் பெரிய தாடி வைத்திருந்ததற்காக அன்சாரி அப்தாப்பின் டிஸ்மிஸ் சரியானதே எனவும் அதிரடியாக உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்.

English summary
The Supreme Court on Thursday held that Indian Air Force personnel cannot sport beards. A petition had been filed by one Ansari Aftab Ahmed, who had sought a direction to the IAF to let him sport his beard. A bench headed by Chief Justice of India, T S Thakur held that regulations are meant to ensure discipline and uniformity.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X