இந்தியாவை தோற்கடிங்க.. ஜிம்பாப்வே நாட்டை சேர்ந்த ஒருத்தர கல்யாணம் பண்ணிக்கிறேன்..பாக். நடிகை ட்விட்

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் டி 20 உலக கோப்பை கிரிக்கெட்டில் வரும் 6-ஆம் தேதி இந்தியா ஜிம்பாப்வே அணிகள் மோத உள்ளன. இதில் இந்தியாவை ஜிம்பாப்வே வீழ்த்தினால் ஜிம்பாப்வே நபரை திருமணம் செய்வதாக பாகிஸ்தான் நடிகை ட்விட் வெளியிட்டுள்ளார். இதை நெட்டிசன்கள் கலாய்த்து உள்ளனர்.

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த டி 20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது.

தற்போது இந்த உலக கோப்பை போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. சூப்பர் 12 சுற்று நடைபெற்று வருகிறது.

 பின் தங்கிய பாகிஸ்தான்

பின் தங்கிய பாகிஸ்தான்

இதில் குரூப் -2 பிரிவில் இடம் பெற்றுள்ள பாகிஸ்தான் அணி ஜிம்பாப்வே அணியுடன் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. இந்தியா, ஜிம்பாப்வே அனிகளுடன் தோல்வி அடைந்துள்ள பாகிஸ்தான் ஒரு வெற்றியுடன் புள்ளிகள் பட்டியலில் பின் தங்கியுள்ளது. இன்று நடைபெற்று வரும் தென் ஆப்பிரிக்க அணியுடன் வெற்றி பெற்றால் மட்டுமே பாகிஸ்தான் அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை தக்க வைக்க முடியும்.

ஜிம்பாப்வே அணியுடன் தோல்வி

ஜிம்பாப்வே அணியுடன் தோல்வி

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஒரு ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்ததே பாகிஸ்தான் அணி கடும் நெருக்கடியை எதிர்கொண்டதற்கு காரணமாக அமைந்துவிட்டது. இதனால், பாகிஸ்தான் ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர். இந்த நிலையில் வரும் 6 ஆம் தேதி நடைபெற உள்ள போட்டியில் இந்திய அணியை ஜிமாப்வே அணி வீழ்த்த வேண்டும் என்றும் அப்படி வீழ்த்தினால் ஜிம்பாப்வே நாட்டை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த பிரபல நடிகை ஷின்வாரி தனது ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.

 ஜிம்பாவே அணியுடன் இந்தியா தோற்றால்..

ஜிம்பாவே அணியுடன் இந்தியா தோற்றால்..

ட்விட்டரில் படு ஆக்டிவாக இருக்கும் ஷின்வாரி, இந்திய அணி தோல்வி அடைய வேண்டும் என்று தொடர்ந்து தனது விருப்பத்தை பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில், ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ஜிம்பாப்வே நாட்டை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக நடிகை ஷிர்வானி கூறியிருப்பது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

தனியாக எப்படி வாழப்போகிறீர்கள்

தனியாக எப்படி வாழப்போகிறீர்கள்

இதில், கிரிக்கெட் ரசிகர்கள் பாகிஸ்தான் நடிகையை டிரோல் செய்தும் வருகின்றனர். இதற்கு முன்னால் பலமுறை ஷிர்வானியின் கணிப்புகள் தவறாக போனதை ரிபோஸ்ட் செய்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். இது பற்றி நெட்டிசன் ஒருவர் வெளியிட்டு இருக்கும் பதிவில், வாழ்க்கை முழுவதும் தனியாக எப்படி வாழப்போகிறீர்கள் என்று நான் உங்களுக்காக வருத்தப்படுவேன்" என்று பதிவிட்டுள்ளார். எப்படியும் ஜிம்பாப்வே அணி தோற்று விடும்.. எனவே ஜிம்பாப்வேயை சேர்ந்தவரை திருமணம் செய்ய முடியாது என்று கலாய்க்கும் வகையில் இப்படி பதிவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+