இளையராஜா - எஸ்.பி.பி. பிரச்சினை விரைவில் தீர வேண்டும்.. வெங்கய்யா நாயுடு நம்பிக்கை

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: இளையராஜா இசையமைத்த பாடல்களை இசைக் கச்சேரிகளில் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பாடக் கூடாது என்று விவகாரம் குறித்து விரைவில் தீர்க்கப்பட்டு விடும் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாக மத்திய அமைச்சர் எம்.வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.

இளையராஜா இசையமைத்த பாடல்களை அவருடைய அனுமதி இல்லாமல் இனி பாடக் கூடாது. மீறி பாடினால் அபராதத்தொகையை சட்டப்படி கொடுக்க வேண்டியிருக்கும் என்று இளையராஜா சார்பில் எஸ்பிபி, பாடகி சித்ரா, எஸ்.பி.பி. சரண் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

 Ilayaraja- SPB issues will be resolved soon, says M.Venkaiah Naidu.

இதைத் தொடர்ந்து எஸ்.பி.பாலசுப்பிரமணியமும், தன்னுடைய இசைக் கச்சேரிகளில் இளையராஜாவின் பாடல்களை பாடப் போவதில்லை என்று அவர் அறிவித்தார். மேலும் இந்த விஷயத்தை யாரும் பெரிதுப்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.

இளையராஜாவின் இசை- பாடல்களை வணிக ரீதியாகப் பயன்படுத்தி கோடிக்கணக்கில் சம்பாதிப்பவர்கள், அவருக்கு சட்டப்படி சேர வேண்டிய ராயல்டியைத் தர மறுப்பது ஏன் என்று இளையராஜாவின் காப்பிரைட் ஆலோசகர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இளையராஜாவின் இசையையும், பாடகர் எஸ்.பி.பி.யின் பாடல்களையும் பிரித்து பார்க்க முடியாதது. இளையராஜாவின் திடீர் அறிவிப்பால் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், இளையராஜாவுக்கும், எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கும் இடையே உள்ள காப்புரிமை தொடர்பான பிரச்சினை குறித்து அறிந்ததும் அதிர்ச்சி அடைந்தேன். எனினும் இந்த பிரச்னைக்கு விரைவில் தீர்வு ஏற்பட்டுவிடும் என்று நம்புகிறேன் என்று தனது பதிவில் வெங்கய்ய நாயுடு குறிப்பிட்டுள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Controversies surrounding Ilayaraja and S.P.Balasubramaniyam will positively resolved, hopes Minister Venkaiah Naidu.
Please Wait while comments are loading...