For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குஜராத்தின் பெரும்பான்மை கிராமப்புறமும் காங்கிரஸ் பக்கம்

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: குஜராத்தில் நகர்ப்புறங்களில் பாஜகவும், கிராமப்புற தொகுதிகளில் காங்கிரசும் ஆதிக்கம் செலுத்தியுள்ளன.

குஜராத்தில், பாஜகவுக்கு நகர்ப்புறங்களில் அதிகம் செல்வாக்கு உண்டு. ஆனால், இம்முறை ஜிஎஸ்டி மற்றும் பண மதிப்பிழப்பு காரணமாக நகர்ப்புற மக்கள் பாஜக மீது கோபத்தில் இருப்பதாக கூறப்பட்டது. பல போராட்டங்களும் அதை உறுதி செய்தன.

ஆனால் தேர்தல் முடிவுகள் அவ்வாறு இல்லை.

செல்வாக்கு

செல்வாக்கு

நகர்ப்புறங்களில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது. அதேநேரம், பாஜகவால் இன்னும் குஜராத்தின் கிராமப்புறங்களில் செல்வாக்கு செலுத்த முடியவில்லை என்பதும் புள்ளி விவரங்கள் உறுதி செய்யும் பாடம்.

நகரங்களில் பாஜக முன்னிலை

நகரங்களில் பாஜக முன்னிலை

நகர்ப்புறங்களில், 55 தொகுதிகள் உள்ளன. இதில் பாஜக 43 தொகுதிகளிலும், பாஜகவும், காங்கிரஸ் 12 தொகுதிகளையும் கைப்பற்றியது. அதேநேரம், ஊரக பகுதிகளில் 127 தொகுதிகள் உள்ள நிலையில், அதில் 71 தொகுதிகளை காங்கிரசும், 56 தொகுதிகளில் பாஜகவும் கைப்பற்றியுள்ளன. இதன் மூலம், கிராமப்புறங்களில் காங்கிரஸ் வெற்றிக்கொடி நாட்டியுள்ளது உறுதியாகியுள்ளது.

கிராமங்களில் கை கொடி

கிராமங்களில் கை கொடி

அதேநேரம் கடந்த சட்டசபை தேர்தலை ஒப்பிட்டால் கிராமப்புறங்களில் காங்கிரஸ் 8 தொகுதிகளில் முன்னிலை வகித்தது. அதாவது, இம்முறை, 127 கிராமப்புற தொகுதிகளில், 71ல் காங்கிரஸ் முன்னிலை வகித்தது. கடந்த தேர்தலை ஒப்பிட்டால் கிராமப்புற தொகுதிகளில் பாஜக பல இடங்களை இழந்துள்ளது.

வித்தியாசம் பாருங்கள்

வித்தியாசம் பாருங்கள்

மொத்தத்தில், நகர்ப்புறம் என எடுத்து பார்த்தால் பாஜக மற்றும் காங்கிரஸ் நடுவேயான வெற்றி வித்தியாசம் 75-25 என்ற அளவிலும், கிராமப்புறங்களில் 50-50 என்ற அளவிலும் உள்ளது. இதுதான் குஜராத்தில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியமைக்க முக்கிய காரணம்.

English summary
In Gujarat, Rural voter is split 50-50 between BJP and Congress. Urban voter is split 75-25 in BJP's favour.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X