For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பேருந்தில் மனைவி மரணம்... சடலத்துடன் நடுகாட்டில் இறக்கிவிடப்பட்ட கணவர்.. இது ம.பி. அவலம்

By Mathi
Google Oneindia Tamil News

போபால்: பேருந்தில் பயணித்து கொண்டிருந்த போது மனைவி மரணமடைந்துவிட்டதால் நடுவழியிலேயே சடலத்துடன் கணவரை இறக்கிவிட்ட கொடூர சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.

ஒடிஷாவில் மனைவியின் சடலத்தைக் கொண்டு செல்ல இலவச அமரர் ஊர்தி தரப்படாததால் 10 கிமீ அதை கணவரே சுமந்த சென்றம் நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

In MP man, daughter thrown out of bus after wife died on board

இந்த நிலையில் மத்திய பிரதேசத்தில் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருக்கும் போது உடல்நலக்குறைவால் இறந்த மனைவியுடன் இளைஞர் ஒருவர் பஸ்சில் இருந்து இறக்கிவிடப்பட்ட சம்பவம் நெஞ்சை உலுகியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் தாமோ மாவட்டத்தை சேர்ந்தவர் ராம் சிங் லோதி இவரது மனைவி பெயர் மல்லி பாய். ராம் சிங் மனைவி கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார்.

இந்நிலையில் உடல் நலம் சரியில்லாத மனைவியை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல 5 மாத குழந்தை மற்றும் தனது தாயார் ஆகியோருடன் தனியார் பேருந்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது மனைவி பேருந்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதனை அறிந்த கண்டக்டர் அவர்களை பாதி வழியிலேயே இறங்கச் சொல்லி வற்புறுத்தினார். ராம் சிங் எவ்வளவோ கெஞ்சியும் கண்டக்டர் கண்டுகொள்ளவில்லை. ஈவிரக்கமில்லாமல் நடுகாட்டில் அவர்களை வலுக்கட்டாயமாக இறக்கிவிட்டினர்.

இறந்த மனைவியை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதா வீட்டுக்கு கொண்டு செல்வதா என்று தெரியாமல் தவித்தார். இறக்கிவிடப்பட்ட இடத்தில் இருந்து மருத்துவமனைக்கு செல்ல 20 கி.மீ பயணம் செய்ய வேண்டும்.

இந்நிலையில் அந்த வழியாக ஹசாரி மற்றும் ராஜேஷ் படேல் என்ற இரு வழக்கறிஞர்கள் சென்று கொண்டிருந்தனர், இவர்களின் நிலைமையை அறிந்த அவர்கள் ராம் சிங் மனைவியின் உடலை அருகில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்து செல்ல உதவி செய்தனர். அதனை தொடர்ந்து ராம் சிங் லோதி போலீசில் புகார் தெரிவித்தார்.

வழக்கை பதிவு செய்த போலீசார் அந்த பேருந்தின் டிரைவர் மற்றும் கண்டக்டரை கைது செய்தனர்.

English summary
In an inhumane act a man and his five month old daughter were thrown out of the bus they were travelling in after his sick wife died on board in Damoh district of Madhya Pradesh on Saturday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X