இதுக்கு ஒரு முடிவே இல்லையா..? பாலியல் தொல்லையால் சிறுமி தற்கொலை
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் இருவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறி 17 வயது சிறுமி கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் பார்மீர் மாவட்டத்தில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் ரிகோ என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் வசிக்கும் கூலித் தொழிலாளி குடும்பத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த சில மாதங்களாக பள்ளிகள் மூடப் பட்டிருந்த நிலையில் படிப்பை நிறுத்தி அந்த சிறுமி வீட்டில் பெற்றோருக்கு உதவியாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அந்த 17 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நீண்ட நேரம் ஆகியும் சிறுமி வெளியே வராத நிலையில் கதவைத் தட்டியும் திறக்கவில்லை.

சிறுமி தற்கொலை
இதையடுத்து சிறுமி குறித்து அருகில் இருந்தோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் கிராம மக்கள் உதவியோடு கதவை உடைத்து பார்த்தபோது சிறுமி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்கொலை கடிதம்
சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் வீட்டில் சோதனை செய்தபோது தற்கொலை செய்து கொண்ட சிறுமி தற்கொலைக்கு சில மணிநேரங்களுக்கு முன்பு எழுதி வைத்த ஒரு கடிதத்தை கைப்பற்றினர். அந்தக் கடிதத்தில் தன்னை அதே பகுதியைச் சேர்ந்த மகேந்திர குமார் கார்த்திக் ஆகிய இரு இளைஞர்கள் பாலியல் வன்கொடுமை செய்து விட்டதாகவும், இதை வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.

சிறுமிக்கு மிரட்டல்
மேலும் அந்த இருவரும் தன்னை தொடர்ந்து மிரட்டி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதோடு, இதை வெளியே கூறினால், தனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் வீடியோ மற்றும் போட்டோக்களை இணையத்தில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியுள்ளனர் எனவும், இதனால் தான் இந்த தற்கொலை முடிவை எடுத்துள்ளதாக அந்த சிறுமி தற்கொலை கடிதத்தில் எழுதியுள்ளார்.

போலீசார் விசாரணை
இதையடுத்து சந்தேக மரண வழக்கை, பாலியல் வன்கொடுமை மற்றும் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், சிறுமியின் தற்கொலைக்குக் காரணமான கார்த்திக் மற்றும் மகேந்திர குமார் ஆகிய இருவரை தேடி வருகின்றனர். கடந்த சில நாட்களாகவே இந்தியாவில் பாலியல் வன்கொடுமை காரணமாக சிறுமிகள் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications