நான்வெஜ் போர்டுகளுக்கு நோ... டெல்லியில் பாஜக நிர்வகிக்கும் பகுதிகளில் அட்டூழியம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் பாஜக கட்சி வெற்றி பெற்று இருக்கும் இடங்களில் உள்ள அசைவ ஹோட்டலுக்கு எதிராக சட்டம் கொண்டு வரப்பட்டு இருக்கிறது. பாஜக கட்சியை சேர்ந்த கவுன்சிலர்கள் இந்த ஆணையை பிறப்பித்து இருக்கிறார்கள்.

இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடத்தினாலும் பாஜகவும் சில இடங்களில் வென்று இருக்கிறது. பாஜக வென்று இருக்கும் பகுதிகளில் மட்டுமே இப்படி எல்லாம் சட்டம் கொண்டு வரப்பட்டு இருக்கிறது.

இதனால் முக்கால்வாசி அசைவ ஹோட்டல்கள் விரைவில் மூடப்படும் என்று கூறப்பட்டு இருக்கிறது.

அசைவம் கூடாது

அசைவம் கூடாது

டெல்லியில் பாஜக அதிகம் வென்று இருக்கும் பகுதியான தெற்கு டெல்லியில் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டு இருக்கிறது. இந்த சட்டத்தின் படி அசைவ உணவுகளை ஹோட்டலுக்கு வெளியே வைத்து சமைக்கவோ, விளம்பரப்படுத்தவோ கூடாது. கண்ணாடி பொட்டிக்குள் வைத்து கூட சமைக்க கூடாது. அதேபோல் கோழி, ஆடுகளை வெட்டி விற்கும் போது அது மக்கள் கண்களில் படும்படி வைக்க கூடாது.

யார் செய்கிறார்கள்

யார் செய்கிறார்கள்

தெற்கு டெல்லியில் இருக்கும் பல பாஜக கவுன்சிலர்கள் இந்த சட்டத்தை கொண்டு வந்துள்ளனர். முக்கியமாக ஷிகா ராஜ், நந்தினி சர்மா போன்ற டெல்லி பாஜக நிர்வாகிகள் இந்த சட்டத்தை கொண்டு வந்துள்ளனர். நந்தினி சர்மா தற்போது கவுன்சிலராக இருக்கிறார். அங்கு இருக்கும் முனிசிபாலிட்டி அமைப்பும் இந்த சட்டத்திற்கு அனுமதி வழங்கி இருக்கிறது.

பிரச்சனை என்ன

பிரச்சனை என்ன

அசைவ உணவுகளை வெளியே வைப்பதால் சுத்தம் கெடும் என்று கூறியுள்ளனர். மேலும் இது மக்களின் உணர்வுகளுக்கு எதிராகவும் இருக்கிறது என்று கூறியுள்ளனர். இந்த விஷயம் பிரச்சனை ஆனதை அடுத்து இந்த சட்டம் ஹோட்டல்களில் சுத்தத்தை கடைபிடிக்க வேண்டும் என்பதற்காக கொண்டு வரப்பட்டு இருக்கிறது என்று கூறியுள்ளனர்.

காங்கிரஸ்

காங்கிரஸ்

இது குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் உறுப்பினர் அபிஷேக் தத் ''மத்தியில் அவர்கள் ஆட்சியில் இருப்பதால் நாடு முழுக்க அவர்கள் நினைக்கும் சட்டம் எல்லாவற்றையும் கொண்டு வர முடியும் என்று அர்த்தம் இல்லை. உணவு சுத்தம் தான் முக்கியம் என்றால் ஏன் சைவ உணவுகளை இந்த சட்டத்திற்குள் கொண்டு வரவில்லை. இது முழுக்க முழுக்க மக்களின் சுதந்திரத்திற்கு எதிரானது'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Delhi BJP banned Non-Veg Food display in hotels in their ruling areas. They have banned to for showcasing food and non-veg items.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற