For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டெல்லியில் இடது கை ஆள்காட்டி விரலில் மை.... தமிழகத்தில் வலது கை விரல்

வங்கிகளில் 500 மற்றும் 1000 ரூபாய் மாற்ற வருபவர்களின் விரல்களில் மை வைக்கும் பணி தொடங்கியுள்ளது.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: வங்கிகளில் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வருவோருக்கு விரலில் மை வைக்கப்பட்டு வருகிறது. டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் இடது கை ஆள்காட்டி விரலில் மை வைக்கப்படுகிறது.

தமிழகத்திலும் ரிசர்வ் வங்கி, கீழ்ப்பாக்கம் பஞ்சாப் நேசனம் வங்கியிலும் மை வைக்கும் பணி தொடங்கியுள்ளது. தமிழகம், புதுச்சேரியில் நவம்பர் 19ம் தேதி 4 சட்டசபைத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளதால் தமிழகத்தில் வலது கை ஆள்காட்டி விரலில் மை வைக்கப்படுகிறது.

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளுக்கு தடைவிதிக்கப்பட்ட பிறகு நாடு முழுதும் சில்லறை நோட்டுக்களுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றன. பணம் எடுப்பதில், பணத்தை மாற்றுவதில் என்று பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்த நிலையில் ஒரு நபரே பல முறை வங்கிகளுக்கு சென்று பணத்தை மாற்றுகிறார் என்று குற்றச்சாட்டு எழுந்தது. கறுப்பு பணம் நல்ல நோட்டுக்களாக மாற்றப்படுகிறதோ என்ற சந்தேகம் மத்திய அரசுக்கு எழுந்தது. இதனைத் தடுக்க மத்திய அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுபவர்களுக்கு மட்டும் வலது கை ஆள்காட்டி விரலில் மை வைக்கப்படும் என்று நேற்று மத்திய அரசு அறிவித்தது. கர்நாடகாவில் உள்ள நிறுவனத்திடம் இருந்து மை வரவழைக்க மத்திய அரசு கேட்டிருந்த நிலையில் இன்று பிற்பகல் வரை பெரும்பாலான இடங்களுக்கு மை வரவில்லை.

டெல்லியில் உள்ள எஸ்பிஐ வங்கிகளில் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற வருபவர்களுக்கு இடது கை விரலில் மை வைக்கும் முறை தொடங்கியுள்ளது. தமிழகத்தின் எந்த வங்கிக்கும் மை வரவில்லை என்று வங்கி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

தற்சமயம் இடைத்தேர்தல் நடைபெற உள்ளதால், தேர்தல் நடைபெறும் இடங்களில் வலது கை ஆள்காட்டி விரலிலும், தேர்தல் நடைபெறாத இடங்களில் இடது கை ஆள்காட்டி விரலிலும் மை வைக்கப்படுகிறது.

வட இந்தியாவில் பல வங்கிகளில் பணம் மாற்ற வருபவர்களின் கைகளில் மை வைக்கப்படுகிறது. பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் மை வைக்கப்பட்டு பணம் வழங்கப்படுகிறது.

அழியாத மை வரும் வரை காத்திருக்க வேண்டும் என்றும் தாங்களாக வெளியில் மை வாங்கி வைக்க வேண்டாம் என்றும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியது. இந்த நிலையில் சென்னையிலும் பணம் மாற்ற வருபவர்களின் கைகளில் மை வைக்கும் பணி தொடங்கியுள்ளது. கீழ்ப்பாக்கம் பஞ்சாப் நேசனல் வங்கியிலும், பாரிமுனையில் உள்ள ரிசர்வ் வங்கியிலும் விரலில் மை வைக்கும் பணி தொடங்கியுள்ளது.

English summary
Use of indelible ink on right index finger of customers begins.customers who exchange currency notes of Res 500 and 1,000. The government had announced on Tuesday that banks would ink the fingers of customers who exchange money at banks to ensure that they do not breach the daily limit.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X